புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!
tvk leader Vijay speech in puducherry: தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரிக்கும் தமிழக வெற்றிக் கழகம் குரல் எழுப்பும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார். மேலும், பல்வேறு முக்கிய பிரச்சனைகளை விஜய் பேசியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசுக்கு தமிழ்நாடு வேறு புதுச்சேரி வேறாக உள்ளது. ஆனால், நம்ம வகையறாக்கள் எங்கிருந்தாலும் அனைவரும் ஒன்றுதான். வேறு, வேறு வீட்டில் இருப்பதால் நாம் அனைவரும் சொந்தம் தான். எந்த மாநிலத்தில் இருந்தாலும் தமிழர்கள் ஒன்றுதான். மகாகவியும், பாவேந்தரும் கலந்த மண் புதுச்சேரி ஆகும். தமிழக மக்கள் போல சுமார் 30 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களும் என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், விஜய் தமிழக மக்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று எண்ண வேண்டாம். புதுச்சேரி மக்களுக்கும் விஜய் குரல் கொடுப்பான். தமிழகத்தில் திமுக ஆட்சியைப் போல புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை.
புதுச்சேரி அரசிடம், தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்
புதுச்சேரியில் மாற்று கட்சிகளுக்கு அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது. இதனை, புதுச்சேரி அரசிடம் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநில அந்தஸ்து, புதுச்சேரி வளர்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பேர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். புதுச்சேரியில் ஐடி நிறுவனம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!




புதுச்சேரியில் போதிய வளர்ச்சி இல்லை
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டால் நீக்கம் செய்யப்பட்ட அமைச்சருக்கு பதிலாக மீண்டும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள்கள் ஆகியும் இலாக வழங்கவில்லை. 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை. இதனால் புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசு தோராயமாகவே நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதற்கு போதுமானதாக இருக்கிறது.
தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்
தமிழகத்தை போல புதுச்சேரியும் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரியாக உள்ளது. புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். புதுச்சேரி மீனவர்களின் படகுகளை இலங்கை மீனவர்கள் பறிமுதல் செய்து செல்கின்றனர். புதுச்சேரியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். நல்லதே நடக்கும் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும் படிக்க: புதுவையில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு.. தீவிரமாகும் விசாரணை…