திமுக ஊழல் பணத்தை வைத்து ஓராண்டுக்கான பட்ஜெட் போடலாம் – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
Edappadi Palaniswami: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, டிசம்பர் 8, 2025: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையை கவனித்து வரும் திமுகவின் மூத்த அமைச்சர் கே. என். நேரு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், 258 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. இந்த சூழலில், “அதிமுக தலைமையில் 2026ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த பின் கரைவெட்டிகள் அனைவரும் கம்பி என்ற போகுவது உறுதி” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முறையாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் கே. என். நேரு மீது அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கடிதம் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சி:
ரூ. 1,020,00,00,000 !!!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக @dir_ed தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் @KN_NEHRU, தனது…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 8, 2025
இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தனது X வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் தென்றல் எடுப்பது மட்டுமே 1,020 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத்துறை கண்டறிந்து, தமிழக பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. திமுக அரசின் அமைச்சர் கே. என். நேரு தனது உறவினர்கள் வாயிலாக டெண்டர்களுக்கு 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..
கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்:
மேலும், வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் “கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்” தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன். ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 தொகுதிகள்…திமுகவின் நிலைப்பாடு என்ன!
ஊழல் பணத்தை வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யலாம்:
ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம். -பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம். அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்” என தெரிவித்துள்ளார்.