Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!

Vijay Changed His Campaign Style: புதுச்சேரியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சியின் தலைவர் விஜய்யின் செயல்பாடுகள், பிரசார முறைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதற்காக இந்த மாற்றம் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!
கரூர் சம்பவத்தால் பாடம் கற்ற விஜய்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Dec 2025 11:29 AM IST

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரச்சார பாணியை மாற்றியுள்ளார். அது என்னவெனில், முன்பு திருச்சி, திருவாரூர், அரியலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மக்கள் சந்திப்பு பயணத்துக்கு சென்ற விஜய் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை தனது கேரவனிலும், பிரச்சார வாகனத்தில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், கரூரில் கூட்டணி நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த பாணியை அவர் மாற்றி உள்ளார்.

கருப்பு நிற காரில் சென்ற விஜய்

அதன்படி, புதுச்சேரியில் உப்பளம் துறைமுகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்துக்காக, கட்சியின் தலைவர் விஜய் தனது வீட்டில் இருந்து கருப்பு நிற காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி சென்றார். அவர் செல்லும் வழியில், காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அவரைப் பார்த்து கை காண்பித்தனர். இதற்கு விஜய்யும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து காரினுள் இருந்தவாறு தனது கையை காண்பித்து பதில் அளித்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி…என்ன காரணம்!

பரபரப்பும், ஆரவாரமின்றி சென்ற விஜய்

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எந்தவித பரபரப்பும், ஆரவாரமும் இன்றி அனைவருக்கும் பாதுகாப்பு முறையில் விஜய் புதுச்சேரி வந்தடைந்தார். இதற்கு முன்பு விஜய் வருகையில் அவருடன் 10-க்கும் மேற்பட்ட கார்கள் வருவதும், பவுன்சர்கள் வருவதும், தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வருவதுமாக இருந்தது. தற்போது, விஜய் எந்தவித ஆரவாரமும் இன்றி தனது காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தடைந்தார்.

கரூர் சம்பவத்தின் மூலம் பாடம் கற்ற விஜய்

இதன் மூலம் கரூர் சம்பவத்தால் விஜய் பாடம் கற்றுள்ளாரா என்று எண்ண தோன்றுகிறது. விஜயின் பிரச்சார பேருந்தும் புதுச்சேரி உப்பளம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.  ஏனென்றால், முந்தைய மக்கள் சந்திப்புகளில் பொதுமக்களுக்கு என்னவெல்லாம் தொந்தரவாகவும், பிரச்சினையாகவும் இருந்ததோ அதையெல்லாம் விஜய் மாற்றி கொண்டிருப்பதாக தெரிகிறது. கரூர் சம்பவத்தில் விஜய்யின் பிரச்சார பேருந்து கூட்டத்துக்குள் நுழைந்ததன் காரணமாக மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டது.

பிரசார பாணி-செயல்பாடுகளை மாற்றிய விஜய்

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மூன்று கார்கள் மட்டுமே தன்னை பின் தொடர்ந்து வர விஜய் அனுமதித்துள்ளார். இதனால் விஜய்யின் செயல்பாடுகள், பிரச்சார யுத்திகள், பிரச்சார முறைகள் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: புதுவையில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு.. தீவிரமாகும் விசாரணை…