Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்த போது நேர்ந்த சோகம்.. உயிரிழந்ததற்கு இதுதான் காரணமா?

Baby Dies After Drinking Milk: டிசம்பர் 7, 2025 அன்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை அழுதது. குழந்தை அழுததால் பூஜா தூக்கத்தில் இருந்து எழுந்து குழந்தைக்கு பால் கொடுத்தார். பின்னர் அவர் மற்றும் குழந்தை இருவரும் மீண்டும் தூங்கிவிட்டனர். ஆனால் காலையில் எழுந்த போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்த போது நேர்ந்த சோகம்.. உயிரிழந்ததற்கு இதுதான் காரணமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Dec 2025 07:30 AM IST

டிசம்பர் 9, 2025: சமீப காலமாக பச்சிளம் குழந்தைகள், குறிப்பாக பால் குடிக்கும் நேரத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாதமே ஆன ஸ்ரீனி என்ற ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் அணில் (வயது 21). அவரது மனைவி பூஜா (வயது 20). இவர்கள் இருவருக்கும் பிறந்து ஒரு மாதமே ஆன ஸ்ரீனி என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக பூஜாவுக்கு கடுமையான தலைவலி மற்றும் கால் வலி ஏற்பட்டது. இதனால் அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டபோது, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்த போது நேர்ந்த சோகம்:

அதன்படி, பூஜா நவம்பர் 28ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், டிசம்பர் 7, 2025 அன்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை அழுதது. குழந்தை அழுததால் பூஜா தூக்கத்தில் இருந்து எழுந்து குழந்தைக்கு பால் கொடுத்தார். பின்னர் அவர் மற்றும் குழந்தை இருவரும் மீண்டும் தூங்கிவிட்டனர்.

மேலும் படிக்க: புதுவையில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்.. இதுதான் பேசப்போகிறாரா?

காலை எழுந்தபோது, பூஜா குழந்தையை பார்த்தபோது, அது அசைவின்றி இருப்பதை கவனித்தார். உடனே அவர் அணிலிடம் தெரிவித்தார். குழந்தை அசைவின்றி கிடந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு பூஜா மற்றும் அணில் மனம் உடைந்து கதறி அழுதனர்.

குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கும் காவல் துறையினர்:

இதுகுறித்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை பால் குடித்தவுடன் உடனே தூங்க வைக்கப்பட்டதால், தூக்கத்தில் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பத்தில் கூறப்படுகிறது. அல்லது தூக்க கலக்கத்தில் பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் மட்டுமே குழந்தை உயிரிழந்ததற்கான சரியான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

பிறந்த குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது அதிக கவனம் அவசியம். குழந்தைகள் பால் குடிக்கும் போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தை பால் குடிக்கும் நேரத்தில் அது நன்றாக குடிக்கிறதா, சிரமப்படுகிறதா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதேபோல், பால் குடித்த பிறகு குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை குழந்தையை தோளில் அல்லது கையில் வைத்து, முதுகில் மெதுவாக தட்டி ‘தும்மல்’ வரச் செய்து பின்னரே படுக்க வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.