ஆரண்ய காண்டம் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி!
Actor Vijay Sethupathi Release Aaranya Kaandam Movie: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்னதாக வெளியான படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக தற்போது ஆரண்ய காண்டம் படம் வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாரம் வாரம் ஒரு படமாவது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழ் சினிமவில் வெளியாகும் புதுப் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது போல ரீ ரிலீஸ் ஆகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வருகின்ற வாரமும் ஒரு படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆரண்ய காண்டம் இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கி இருந்தார். இதுதான் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், சம்பத் ராஜ், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், யாஸ்மின் பொன்னப்பா, மாஸ்டர் வசந்த், சாய் தீனா, குத்துச்சண்டை வீரர் ஆறுமுகம், ஜெயஸ்ரீ, ஷாகுல் மாஸ்டர், அஜய் ராஜ், சுகுந்தன், அலெக்ஸ், கே.கார்த்திகேயன், ரமேஷ், தினேஷ் சுப்பராயன், புதுப்பேட்டை சுரேஷ், ஃபை ஸ்டார் கிருஷ்ணா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




ஆரண்ய காண்டம் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது:
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் சமீபத்தில் இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அரசன் படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபல நடிகர்கள்… அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள்
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy to share the critically acclaimed #AaranyaKaandam trailer here.
Experience it on the big screen from March 13.
Best wishes to the team for the re-release.
Tamil Nadu theatrical release by @ThinkStudiosIND@charanproducer…
— VijaySethupathi (@VijaySethuOffl) March 11, 2026
Also Read… ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டும் படக்குழு…