Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா.. மூன்று நாட்கள் கோலகலமாக நடத்த திட்டம்!

Chennai International Book Fair 2026 | சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா 2026, ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில் மொத்தம் 64 நாடுகள் மற்றும் 81 மொழிகளுடன் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா.. மூன்று நாட்கள் கோலகலமாக நடத்த திட்டம்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Dec 2025 08:25 AM IST

சென்னை, டிசம்பர் 10 : சென்னையில் (Chennai) ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 4வது பதிப்பாக புத்தக திருவிழாவை பள்ளி கல்வித்துறையின் முன் முயற்சியால் பொதுநூலக இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், இந்த புத்தக திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் என்ன, அது எந்த காலக்கட்டத்தில் நடைபெற உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா – எப்போது தொடங்குகிறது?

இந்த முறை சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா ஜனவரி 16, 2025 முதல் ஜனவரி 18, 2025 வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் 24 நாடுகளை கொண்டு இந்த திருவிழா தொடங்கப்பட்டது. இதுவே 2024 ஆம் ஆண்டில் 40 நாடுகள் மற்றும் 39 மொழிகளுடன் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. தற்போது, 2025-ல் 64 நாடுகளுடன் மொத்தம் 81 மொழிகளில் இந்த புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டத்தை கையில் வைத்து, சூழ்ச்சி செய்து… திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய்

இனி வரும் ஆண்டுகளில் 100 நாடுகள் பங்கேற்கும்

இந்த ஆண்டுக்கான புத்த திருவிழாவில் மொத்தம் 64 நாடுகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ள நிலையில், இனி வரும் ஆண்டுகளில் 100 நாடுகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள தமிழ்நாடு அரசு, இந்த புத்தக திருவிழாவில் தமிழ் இலக்கியங்களை கொண்டாடி, தமிழ்நாட்டை உலக இலக்கிய செழுமையின் மைய பகுதியை நோக்கி வலுவாக முன்னெடுத்து செல்லப்பட உள்ளதாகவும், உலக இலக்கிய செழுமையின் மைய பகுதியை நோக்கி வலுவாக முன்னெடுத்து செல்லப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் – நிராகரித்ததற்கான 5 காரணங்கள் இதுதான்- மத்திய அரசு விளக்கம்

புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த புத்தக திருவிழாவுக்கான லோகோவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (டிசம்பர் 09, 2025) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.