Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு

Pongal Gift : புதுச்சேரியில் ஒவ்வொரு ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் ரேசன் கடை இல்லாத மாநிலம் புதுச்சேரி என விஜய் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது சர்ச்சையயை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பரிசை அறிவித்த புதுச்சேரி அரசு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Dec 2025 15:05 PM IST

புதுச்சேரி, டிசம்பர் 10: புதுச்சேரி (Puducherry) அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.750 மதிப்புடைய பொங்கல் (Pongal) பரிசு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அம்மாநில மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரூ.750 மதிப்பில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.

பொங்கல் பரிசை அறிவித்த புதுச்சேரி அரசு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பொங்கல் வைத்து கடவுளை வழிபடுவது வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், ரூ.750 மதிப்பில் மளிகை பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுப்பு வருகிற ஜனவரி 3, 2025 முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும்.

இதையும் படிக்க : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. டிச.12ல் வருகிறது மாற்றம்.. அரசு சொன்ன குட் நியூஸ்!!

பொங்கல் பரிசு விவரங்கள்

ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.750 மதிப்பில் மளிகைத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு வெல்லம், 1 கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரிய காந்தி எண்ணெய், பொருட்களை எடுத்து செல்ல ஒரு துணிப்பை ஆகியவை வழங்கப்படவிருக்கிறது. இவை அனைத்தும் பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 9, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான் என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. அம்மாநிலத்தில் ஏற்கனவே ரேசன் கடைகள் தொடங்கப்பட்டதாகவும், அது தெரியாமல் விஜய் பேசுவதாகவும் விமர்சனங்ள் எழுந்தன.

இதையும் படிக்க : சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா.. மூன்று நாட்கள் கோலகலமாக நடத்த திட்டம்!

இந்த நிலையில் விஜய்யின் பரபரப்பு குற்றச்சாட்டு குறித்து பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்ரேியை விஜய் எப்போது வந்து பார்த்தார்? அரசின் இலவச அரிசித் திட்டம் ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது கூடத் தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார் என அவர் தனது விமர்சனத்தை பதிவு செய்தார்.