AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கனமழை எதிரொலி… புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Ditwah Cyclone : தித்வா புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைாயகா இந்த இந்த விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனமழை எதிரொலி… புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Nov 2025 22:14 PM IST

சென்னை, நவம்பர் 30 : தித்வா (Ditwah) புயல் சென்னைக்கு அருகே 140 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், டிசம்பர் 1, 2025 வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் தித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.  இந்த நிலையில் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தித்வா பயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க : நாளைமுதல் கனமழை இல்லை.. சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தித்வா புயலால் நவம்பர் 29, 2025 இரவு கடலூர், விழுப்புரம், சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 3 மாவட்டங்களிலும் நேற்றிரவு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததற்கு வறண்ட காற்றின் ஊடுருவலே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விளக்கமளித்தார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார்”.. முதல்வர் ஸ்டாலின் உறுதி !!

மேலும் டிசம்பர் 1, 2025 நாளை திருவள்ளூரில் மட்டும் கனமழை பெய்யும் எனவும் டிசம்பர் 2, 2025 செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் செவ்வாயக்கிழமை முதல் கனமழை இல்லை என சொல்லப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us