AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!
திருவண்ணாமலை கோவில்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 10:34 AM IST

திருவண்ணாமலை, நவம்பர் 30: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, டிசம்பர் 2,3 மற்றும் 4ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் அனைத்து தனியார் மற்றும் டாஸ்மாக் மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பார்க்கப்படுவதால், கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டு வரும் டிசம்பர் 3 ஆம் தேதி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

மேலும் படிக்க: ‘தித்வா புயல்’ எதிரொலி: தென் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்!!

திருவண்ணாமலைக்கு ஆரஞ்ச் அலர்ட்:

இந்நிலையில், மகா தீப திருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தித்வா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய புவியியல் ஆய்வு மைய வல்லுநர் குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை இல்லாத நிலையில் இருக்கிறது.

ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் கற்பாறைகள் தளர்ந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மலை மீது பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

பெஞ்சல் புயலால் மண் சரிவு:

கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால், அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி இறந்தனர். எனவே, புவியியல் வல்லுனர்களின் பரிந்துரைப்படி, கடந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்தவகையில், இந்த ஆண்டும், தித்வா புயலால் தற்போது ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மலையேறும் பாதை உறுதித்தன்மை அற்று உள்ளதாக வல்லுநர் குழு தெரிவித்ததால் பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:

அதோடு, கார்த்திகை தீபத் திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம், மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், வரும் டிசம்பர் 2,3 மற்றும் 4ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் டாஸ்மாக் மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us