Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்திகை தீபம்: வீடுகளில் எப்போது விளக்கேற்ற வேண்டும்? விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை!

Karthigai Deepam : கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை நமக்கு அளிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த சடங்குகளை நாம் முறையாக மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு முழு பலன்களும் கிடைக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: வீடுகளில் எப்போது விளக்கேற்ற வேண்டும்? விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Nov 2025 22:17 PM IST

திருவண்ணாமலையில் (Thiruvannamalai) கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் டிசம்பர் 3, 2025 அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் அன்று மாலை 6 மணிக்கு மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காலகட்டங்களில் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை நமக்கு அளிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த சடங்குகளை நாம் முறையாக மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு முழு பலன்களும் கிடைக்கும்.  அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீபத் திருநாளன்று விளக்கேற்றி வழிபடுவது அரசர் காலத்தில் இருந்து தொடரும் நடைமுறை என்று கூறப்படுகிறது.  பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் இந்த திருவண்ணாமலைக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வருகதை தந்து சிவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : கார்த்திகை வளர்பிறை சஷ்டி: இதை செய்தால் உங்கள் பிரச்சினைகள் பறந்தோடும் ..

திருவண்ணாமலை செல்ல முடியாதவர்கள் வீடுகளில் விளக்கேற்றி சிவனை வழிபடலாம். திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றும் நேரமான மாலை 6 மணிக்கு பிறகு கடவுளை வழிபட்டு, அதன் பிறகு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது, திருவண்ணாமலையில் ஒளி வடிவமாக காட்சி தரும் சிவன், நம்முடைய வீடுகளிலும் தோன்றி, நமக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காக வீடுகளிலும் விளக்கேற்றப்படுகிறது என்பது நம்பிக்கை. இந்த நடைமுறை தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது.

விளக்கேற்றுவதற்கு வீடு எவ்வளவு பெரிதாகவோ, அல்லது சிறியதாகவோ இருந்தாலும் பரவாயில்லை. மொத்தமாக 27 விளக்குகள் ஏற்றுவதே சரியான முறை என்று கூறப்படுகிறது அதற்கு மேல் நம் விருப்பம் போல் அதிகபட்சம் 100 விளக்குகள் வரை ஏற்றலாம். ஆனால் குறைந்தது 27 விளக்குகள் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். அதாவது 27 விளக்குகள் ஏற்றுவது 27 நட்சத்திரங்களை குறிக்கிறது என்பது ஐதீகம். 

இதையும் படிக்க : காலையா? மாலையா? கடவுளை தினமும் வழிபடுவதற்கு எந்த நேரம் சிறந்தது?

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் இட்டு, பஞ்சு திரியால் விளக்கேற்ற வேண்டும். மேலும் நாம் ஏற்றும் விளக்குகளில் குறைந்தது  ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த நெய் தீபத்தை பூஜை அறையில் உள்ள சாமி படத்திற்கு முன் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.  மேலும், ஒருமுறை விளக்கேற்றியதும் அதனை அடிக்கடி தூண்டிவிடக் கூடாது. அதே போல ஒருமுறை எண்ணைய் ஊற்றி விளக்கேற்றிய பின், மீண்டும் விளக்கில் எண்ணெய்யோ, நெய்யோ ஊற்றக் கூடாது.  தானாகவே குளிரும் வரை விட்டு விடுவதன் மூலம் நமக்கு முழு பலன் கிடைக்கும்.