Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்திகை வளர்பிறை சஷ்டி: இதை செய்தால் உங்கள் பிரச்சினைகள் பறந்தோடும் ..

karthigai valrpirai sashti: அன்னதானம் செய்வதும், பிறருக்கு உதவுவதும் இந்த நாளின் பலனை பல மடங்கு அதிகரிக்கிறது. சிவபெருமானுக்கும் வில்வ பூஜை செய்யலாம்; இது பித்ரு தோஷ நிவர்த்தி மற்றும் குடும்ப நலனை தரும் என நம்பப்படுகிறது. சூரியாஸ்தமனத்திற்கு பிறகு மலர், தூபம், தீபம் வைத்து முருகனை வழிபடுதல் நலம்.

கார்த்திகை வளர்பிறை சஷ்டி: இதை செய்தால் உங்கள் பிரச்சினைகள் பறந்தோடும் ..
முருகன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Nov 2025 16:41 PM IST

தமிழர் பண்பாட்டில் கார்த்திகை மாதம் முழுவதும் தெய்வீக ஒளியின் காலமாக போற்றப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி முருக பக்தர்களுக்குப் பெரும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. நாளை (நவ.26) கார்த்திகை வளர்பிறை சஷ்டியாகும். முருகன் அருளைப் பெற வேண்டி விரதம் இருக்கவும், வழிபாடுகளைச் செய்யவும் இது சிறந்த நாளாகும். நம் கஷ்டங்களையெல்லாம் பறந்தோடச் செய்வான் முத்துக்குமரன். சஷ்டி என்பது வேலனுக்கு உரிய நாள். தை மாத பூசம், பங்குனி உத்திரம், வைகாசியின் விசாகம், ஆடியின் கிருத்திகை முதலானவையெல்லாம் முருகனுக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்தநாட்களில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும். வளர்பிறை சஷ்டி மற்றும் தேய்பிறை சஷ்டி இரண்டும் மாதந்தோறும் வரும் இரண்டு சஷ்டி திதிகளாகும், இவை முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

Also Read : கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!

சஷ்டியில் முருக வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது:

வளர்பிறை சஷ்டி என்பது அமாவாசைக்குப் பிறகு வரும் சஷ்டி திதி. தேய்பிறை சஷ்டி என்பது பௌர்ணமிக்குப் பிறகு வரும் சஷ்டி திதி ஆகும். ஆனால் கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி, முருகனின் சக்தியும் சித்தமும் அதிகமாய் வெளிப்படும் நன்னாளாகப் புராணங்கள் கூறுகின்றன. முருகன் சூரபத்மனைக் கொன்றது ‘சூரசம்ஹாரம்’ என்றழைக்கப்படும் தெய்வீக நிகழ்வு; அது நிகழ்ந்த தினமும் சஷ்டியேயாகும். அந்த தெய்வீக செல்வாக்கு காரணமாக, சஷ்டியில் முருக வழிபாடு மிகுந்த பலனைப் பெறுகிறது.

வளர்பிறை சஷ்டியில் விரதம் முக்கியம்:

இந்த நாளில் விரதம் இருந்து முருகனைப் பூஜை செய்தால், நோய் நீங்கும், திருமண தடை நீங்கும், கடன் பிரச்சினை தீரும், கர்ப்ப தடைகள் அகலும் எனப் பல அதிசய பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சஷ்டி நாளில் முருகன் கோவிலுக்குச் சென்று பால், தேன், சந்தனம், விபூதி அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நாளில் பக்தர்கள் அதிகாலையில் குளித்து அருகில் உள்ள முருகன் கோவில்களுக்குச் சென்று சிறப்பு அர்ச்சனை செய்யலாம். அதோடு, கந்த சஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களை பாடலாம். இந்த நாளில் விரதம் இருப்பது என்பது முருக பக்தி வெளிப்பாட்டின் முக்கிய அங்கமாகும். ஒருவர் விரதம் இருந்தால் மனம் தெளிவடையும், உடல் சுத்தமடையும், சிந்தனை புனிதமடையும் என்று நம்பப்படுகிறது.

தீபம் ஏற்ற வேண்டும்:

கார்த்திகை வளர்பிறை சஷ்டியில் தீபம் ஏற்றுவது மிகப் புண்ணியமானதாக கருதப்படுகிறது. தீபம் ஏற்றுவது அறியாமை என்னும் இருளை அகற்றி ஞான ஒளி பரப்பும் முருகன்பால் அடைவதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. கோவில்களில் இந்த நாள் மிகுந்த திரளான பக்தர்கள் கூடி பரிசுத்தமான ஆன்மீக சூழ்நிலையை உருவாக்குவர்.

Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!

மனதிலேயை முருகனை நினைக்கலாம்:

வீட்டிலேயே இருப்பவர்கள் கூட முருகன்பால் உள்ளார்ந்த பிரார்த்தனை செய்து, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை ஓதலாம். பக்தியில் மனதை நிலைநிறுத்துகின்ற இந்த நாள், குடும்ப நலன், ஆரோக்கியம், முயற்சிகளில் வெற்றி, மன அமைதி ஆகியவற்றை வழங்கும் என நம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கார்த்திகை வளர்பிறை சஷ்டி என்பது முருகனின் அருளை நினைவு கூர்ந்து, நம் உள்ளத்தை சுத்தப்படுத்தி, நல்லெண்ண வாழ்க்கையை நோக்கிச் செல்லும் ஆன்மீகப் பயணத்தின் புனிதத் தருணமாகும்.