AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘தித்வா புயல்’ எதிரொலி: தென் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்!!

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பநிலை சாதாரணமானதை விட 4 முதல் 6 டிகிரிகள் வரை குறைந்து பதிவாகி ஊட்டி - கொடைக்கானல் போன்ற சூழல் அங்கு நிலவுகிறது. இந்த திடீர் குளிர்ச்சிக்கு தித்வா புயல் ஏற்படுத்திய காற்றழுத்த மாற்றம், அதிக மேகமூட்டமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

‘தித்வா புயல்’ எதிரொலி: தென் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்!!
கடும் குளிர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 08:40 AM IST

தென் தமிழகத்தை நடுங்கவைக்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாக அசாதாரண குளிர் பதிவாகி வருகிறது. தித்வா புயல் காரணமாக காற்றழுத்த மாற்றம் ஏற்பட்டு, பல மாவட்டங்களில் பகலில்கூட வெப்பநிலை திடீரென குறைந்துள்ளது. இதனால், மதுரை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகள் ஊட்டிகொடைக்கானல் போன்ற மலைப்பிரதேச குளிரை உணர்ந்து வருகின்றன. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய தித்வா புயலானது, வடதிசையில் நகர்ந்து வேதாரண்யத்துக்கு கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து, இன்று மாலைக்குப் பின் தித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் நிலையில், வடக்கடலோர தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பகல் நேரத்தில் கடும் குளிர்:

இந்நிலையில், புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்தவகையில், திருநெல்வேலியில் நேற்று 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த நூற்றாண்டில் இல்லாத குறைந்த பகல் நேர குளிர் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக டிசம்பர்ஜனவரி மாதங்களில்கூட இத்தகைய பகல் குளிர் அரிதாகவே ஏற்படும் நிலையில், இம்முறை வெப்பநிலையின் திடீர் சரிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய சாதனைகளை முறியடித்த குளிர்:

மதுரையிலும் இதேபோன்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு பகல் நேர வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்த பதிவாகியுள்ளது. இது கடந்த 2011-ஆம் ஆண்டில் பதிவான 24 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்த வெப்பநிலையைப் பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடியிலும் நேற்று 20.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2004ம் ஆண்டில் பதிவான 25.5 டிகிரி செல்சியஸ் சாதனையை முறியடித்துள்ளது.

பருவ நிலைக்கு மாறான சூழல்:

அதேபோல், தென்காசி, திருச்செந்தூர், பாம்பன், கோவில்பட்டி போன்ற பகுதிகளிலும் 20–23 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலை பதிவாகி, தென் மாவட்டங்களின் பருவ நிலைக்கு மாறான ஒரு சூழல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரியில் கூட 26.6°C என்ற குறைந்த வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தித்வா புயல் எதிரொலி:

வானிலை ஆய்வாளர்கள் கணிப்பின்படி, தித்வா புயலால் மேகமூட்டம் நீடித்திருப்பதும், வடகிழக்கு பருவ காற்றுகள் தென் மாவட்டங்களை நோக்கி அதிக ஈரப்பதத்துடன் வீசுவதும், சூரிய ஒளி நிலத்துக்குச் செல்லாததுமே இந்த குளிர் அதிகரிப்பிற்கான பிரதான காரணங்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

மேலும் அடுத்த 48 மணி நேரமும் தென் மாவட்டங்களில் இதே போன்ற குளிர்ச்சியான நிலை தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் வெப்பநிலை தற்போது பதிவானதை விட, மேலும் 12 டிகிரிகள் குறையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow Us