AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வலுவிழந்த டிட்வா புயல்.. வட தமிழகத்தில் மழை இருக்குமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Ditwah Cyclone: புயல் மெல்ல-மெல்ல வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும் என கணிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 29, 2025 அன்று இது டெல்டா மாவட்டங்களை அடைந்தது. இதன் காரணமாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிக கன மழை பதிவானது.

வலுவிழந்த டிட்வா புயல்.. வட தமிழகத்தில் மழை இருக்குமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Nov 2025 07:35 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 30, 2025: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘டிட்வா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் குமரி கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல-மெல்ல வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு ஏமன் நாட்டின் பரிந்துரையின்படி ‘டிட்வா’ என பெயர் சூட்டப்பட்டது. இந்தப் புயல் முதலில் இலங்கை கடல் பகுதிகளை ஒட்டி நிலவியதால் அங்கு கடுமையான மழைப்பொழிவு பதிவானது. சுமார் 50 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

தமிழகத்தை நோக்கி புயலின் பாதை:

இந்த சூழலில், புயல் மெல்ல-மெல்ல வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும் என கணிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 29, 2025 அன்று இது டெல்டா மாவட்டங்களை அடைந்தது. இதன் காரணமாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிக கன மழை பதிவானது.

மேலும் படிக்க: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வலுவிழந்த டிட்வா புயல் – பிரதீப் ஜான்:


வட தமிழகக் கடற்கரையை புயலாக கடந்துச்செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மட்டுமே நிலவுகிறது என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அவரது வலைதள பதிவின்படி,” டிட்வா புயல் வறண்ட காற்றின் காரணமாக ஈரப்பதத்தைத் தக்கவைக்க முடியாமல் வலுவிழந்துள்ளது. டிட்டுவா புயலினால் மயிலாடுதுறையில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது.

மாலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேகக்கூட்டங்களின்றி சுழற்சியாக இருக்கிறது. பகல் நேரங்களில் மேக கூட்டங்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட தமிழகத்தில் இடையிடையே மழை ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பதிவு இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us