AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Chennai flight disruption : சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மாதிரி புகைப்படம்Image Source: x
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Nov 2025 20:01 PM IST

சென்னை, நவம்பர் 29 : தித்வா (Ditwah) புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதனமானது வரை மழை பெய்து வருகிறது. தித்வா புயல் டிசம்பர் 1, 2025 அன்று அதிகாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வும மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நவம்பர் 29, 30 ஆகிய இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் 29, 2025 அன்று நள்ளிரவு தொடங்கி மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 47 விமானங்கள் (Flights) ரத்து செய்யப்பட்டுள்ளது.

47 விமான சேவைகள் ரத்து

தித்வா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நவம்பர் 30, 2025 அன்று 47 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை நவம்பர் 30, 2025 அன்று 36 உள்நாட்டு விமானங்கள், 11 சர்வதேச விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகுந்தாற்போல பயணத்திட்டத்தை வகுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் தித்தவா புயல் குறித்து பயணிகளுக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியாவின் எக்ஸ் பதிவில், தித்வா புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்னிந்தியாவின் பிற நகரங்களில் இருந்து சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை நோக்கி வரும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் சென்னை விமான நிலையம் வருவதற்குள் விமானத்தின் நிலை குறித்து கேட்டறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஏர் இந்தியாவின் பதிவு

 

இதையும் படிக்க : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னையில் நவம்பர் 29, 2025 அன்று நள்ளிரவு தொடங்கி, நாளை நவம்பர் 30, 2025 அன்று சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து மக்கள் தேவையில்லாம் வெளியே வரவேண்டாம் எனவும், மக்கள் தங்கள் தேவைப்படும் பொருட்களை முன் கூட்டியே வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Follow Us