தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை
State Issues Warning: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தித்வா புயல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைத்து துறைகளும் முறையான திட்டமிடலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் தித்வா (Ditwah) புயல் எதிரொலியாக நவம்பர் 28, 2025 இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28. 2025 அன்று மதியத்திற்கு பிறகு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 29, 2025 நாளையும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’
இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தித்வா புயல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைத்து துறைகளும் முறையான திட்டமிடலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் முதல்வர் உத்தரவிட்டார்.




இதையும் படிக்க : தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், தித்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். 16 மாநில பாதுகாப்பு படைகளும் 12 தேசிய பாதுகாப்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தித்வா புயல் குறித்து முதல்வரின் எச்சரிக்கை பதிவு
#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி… pic.twitter.com/rIyhxAbehj
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 28, 2025
இதையும் படிக்க : கனமழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27, 2025 அன்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு தித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக இலங்கை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.