Ditwah Cyclone: தமிழகத்திற்கு 25 கி.மீ அருகே வரும் டிட்வா புயல்.. 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
Tamil Nadu Rainfall: வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில், வடக்கடலோர தமிழகப் பகுதிகளில் இன்று கனமழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில இடங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், நவம்பர் 30, 2025: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயலானது, வடதிசையில் நகர்ந்து, நேற்று இரவு 08:30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு – தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-ஆம் தேதி) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.
அப்படி வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் டிட்வா, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து, 60 கிலோ மீட்டர் தொலைவிலும், இன்று (30-11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், இன்று (30-11-2025) மாலை 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?
வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில், வடக்கடலோர தமிழகப் பகுதிகளில் இன்று கனமழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 30, 2025 அன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில இடங்களில் அதிக கனமழை பதிவாகக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை… 47 விமானங்கள் ரத்து – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
புயல் வலுவிழக்கும் நிலை:
இன்று மாலைக்குப் பின் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் நிலையில், வடக்கடலோர தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1, 2025 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் வேகம்
இன்று வடக்கடலோர தமிழகத்தில் தரைக்காற்றின் வேகம்: 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 80 கிலோமீட்டர் வேகத்திலும், வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அவசியமான சூழல் தவிர வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.