Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!

Manjolai SIR Work 800 People Registered: நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமத்தில் எஸ் ஐ ஆர் பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது ஆளே இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக ஆன்லைனில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!
எஸ்ஐஆர் பணியில் குளறுபடி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Dec 2025 11:59 AM IST

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியானது நேற்றுடன் வியாழக்கிழமை (டிசம்பர் 11) முடிவடைய இருந்த நிலையில், இந்த பணியானது வரும் டிசம்பர் 14- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஆர் பணியால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி பல்வேறு மாநிலங்களில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதே போல, எஸ் ஐ ஆர் பணிகளில் பொதுமக்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதாகவும், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்தாகவும் என்பன உள்ளிட்ட குளறுபடிகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

73- பேரில் 800 பேர் எஸ்ஐஆர் படிவம் சமர்பித்ததாக பதிவு

இதில், குறிப்பாக சிவகங்கை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான இந்துஜா மற்றும் அவரது கணவரின் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக பெரிய குளறுபடி ஏற்பட்டது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட மாஞ்சோலையில் உள்ள நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய 4 தேயிலை தோட்ட கிராமங்களில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 73 பேர் எஸ் ஐ ஆர் படிவத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், 800 வாக்காளர்கள் இருப்பதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை

வாக்குச்சாவடி அலுலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இது தொடர்பாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பேச்சியம்மாள் என்பவருக்கு சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமத்தில் எத்தனை பேர் உள்ளனர். அவர்களில் எத்தனை பேருக்கு எஸ் ஐ ஆர் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே 93 பேர் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 800 பேருக்கு எஸ் ஐ ஆர் படிவம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது என்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு 7 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வில் அந்தப் பகுதியில் ஆள் இல்லை

மாஞ்சோலை வாக்குச்சாவடி எண் 102- இல் 73 வாக்காளர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, அந்த பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அங்கு யாரும் வசிக்கவில்லை என்பது தெரிய வந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இணையத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!