Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை

Election Commission: இந்த சோதனையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருந்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. இந்த சோதனை நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தேர்தல் அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Dec 2025 06:15 AM IST

சென்னை, டிசம்பர் 12, 2025: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், பொது தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT ஆகியவற்றின் முதல் நிலை சோதனை தமிழ்நாட்டில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் தரப்பில் ஒரு புறம் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையத் தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, EVM-களில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளனவா, அவை சரியான முறையில் செயல்படுகிறதா உள்ளிட்ட விஷயங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: டெல்டாக்காரன் என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன்..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை:

இந்த சோதனையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருந்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. இந்த சோதனை நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தேர்தல் அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் முன்னிலையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது: வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித சோதனை சாதனங்களின் (VVPAT) முதல் நிலை சோதனை (FLC) தமிழ்நாட்டில் 11.12.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..

இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நடைமுறை அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, EVM மற்றும் VVPAT ஆகியவற்றின் முதல் நிலை சோதனை (FLC) மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முதல் நிலை சோதனை எப்படி நடக்கிறது?

முதல் நிலை சோதனை (FLC) நடவடிக்கைகள் மாவட்டத் தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் EVM மற்றும் VVPAT முதல் நிலை சோதனைகள் தொடர்பான முன்னேற்பாடுகள், தரச் சோதனைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்ய, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 13 EVM ஒருங்கிணைப்பு அதிகாரிகள் (EVM Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.