மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..
Chennai Traffic Diversion: சென்னை மத்திய கைலாஷில் நடைமேம்பாலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், டிசம்பர் 12, 2025 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
சென்னை, டிசம்பர் 12, 2025: மத்திய கைலாஷ் சந்திப்பில் 4 திசைகளில் ஏறி இறங்கும் வகையில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. சில பணிகள் மட்டும் மீதமிருக்கையில் மின்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் என்பது சென்னையில் இருக்கும் மிக முக்கிய சந்திப்பாகும். அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், மந்தவளி, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பாக இது விளங்குகிறது. இந்த சந்திப்பில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஏனெனில் அடையாறு, கிண்டி, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதிகளிலிருந்து பல்வேறு திசைகளில் ஏராளமான மக்கள் இந்த வழியாகச் செல்வார்கள்.
மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்:
எனவே மொத்தம் 60 கோடி ரூபாயில் எல் வடிவ மேம்பாலம் கட்டும் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கின. இந்தப் பணிக்கு இடையூறாக இருந்ததால் அங்கிருந்த நடைமேம்பாலம் அகற்றப்பட்டது. மேம்பாலப் பணிகள் முடிந்ததும் நடைமேம்பாலம் மீண்டும் கட்டப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!
3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்:
முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டதன் முடிவில், நகரும் படிகள் (escalators), மின்தூக்கி வசதியுடன் 20 கோடி ரூபாயில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், டிசம்பர் 12, 2025 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
பணிகள் முடிவின் தருவாயில் இருப்பதால் அங்கு மின்கம்பங்கள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்காக 85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 35 விளக்கு கம்பங்கள் மற்றும் ஒரு உயரமான விளக்கு கம்பம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..
இதில் ஒருபுறம், நெடுஞ்சாலைத்துறை ரூ. 60 கோடி மதிப்பில் எல் வடிவ மேம்பாலத்தை கட்டி வருகிறது. இந்த மேம்பாலத்தின் 652 மீட்டர் நீளத்தில் 19 பகுதிகள் உட்பட சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.