Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 16.94 பயனாளிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MK Stalin: மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் 16.94 லட்சம் பயனாளிகளை சேர்த்து, புதிய பயனாளிகளுக்கு கணக்கு அட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறும் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 16.94 பயனாளிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பயனர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் முதல்வர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Dec 2025 21:03 PM IST

சென்னை, டிசம்பர் 12 :  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Thittam) 2 ஆம் கட்டத்தில் 16.94 லட்சம் பயனாளிகளை சேர்த்து, புதிய பயனாளிகளுக்கு கணக்கு அட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வழங்கினார். இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறும் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொகை கூடுதலாக 16.94 லட்சம் பயனாளிகளுக்கும் கூடுதலாக வழங்கப்படவுள்ளது . அதற்கான கணக்கு அட்டையை முதல்வர் டிசம்பர் 12, 2025 அன்று வழங்கினார்.

கூடுதலாக 16.94 லட்சம் பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசு சார்பில் டிசம்பர் 12, 2025 அன்று வெல்லும் தமிழ் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூக செயற்பாட்டாளர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்த தமிழ்நாட்டு பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : மத்திய கைலாஷில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணிகள்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..

மகளிர் உரிமைத் தொகை குறித்து திமுக பதிவு

 

இந்த நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 19.64 லட்சம் பயனர்களுக்கு கணக்கு அட்டையை வழங்கினார். இதன் மூலம் இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தில் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

‘மகளிர் உரிமைத் தொகை உயரும்’

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் பெண்களின் தன்னம்பிக்கை கதைகளை கேட்டு நெகிழ்ந்து போனேன். தற்போது மற்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தி வருகின்றன. இதுவே உரிமைத் தொகை திட்டத்தின் வெற்றி. மக்கள் திட்டங்களை இலவசம் என சொல்பவர்கள் கூட இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை திட்டம் வெறும் தொடக்கம் தான். உரிமைத் தொகை  மேலும் உயரும் என்றார்.

இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!

மேலும் பேசிய அவர், எதிர்காலத்தில் வரலாற்றை எழுதும் போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது என்று எழுதுவார்கள். மக்கள் நல திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தியவர்கள்கூட, அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களில் மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது என்று பேசினார்.