AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்நாடகா காங்கிரஸிற்கு லாலி பாடும் முதல்வர்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாதுவில் புதிய அணை கட்டி தமிழ் நாட்டை காங்கிரஸ் பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் வாதாடவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா காங்கிரஸிற்கு லாலி பாடும் முதல்வர்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Dec 2025 19:38 PM IST

சென்னை, டிசம்பர் 12 : மேகதாதுவில் (Mekedatu) புதிய அணை கட்டி தமிழ் நாட்டை காங்கிரஸ் பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) கேள்வி எழுப்பியுள்ளார். காவிரியில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்காக திட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு முறையான வாதத்தை முன் வைக்க வில்லை என்று கூறி எதிர்கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸின் செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொது செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

இதையும் படிக்க : ரூ.1908 கோடி முறைகேடு…வெளிநாட்டில் முதலீடு செய்ய அமைச்சர் தரப்பு பேச்சு? அமலாக்கத்துறை தகவல்!

தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழக அரசின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், ஏனோ தானோ என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் பதிவு

 

இதையும் படிக்க : தமிழகத்தில் வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடிக்க திட்டம்…தொல். திருமா அட்டாக்!

திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முதல்வர் மு.கஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Follow Us