மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் – என்ன காரணம்?
Cauvery Water Row : கர்நாடகா அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான திட்டங்களைத் தயாரிக்க மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி அளித்தது. அந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுடெல்லி, நவம்பர் 13 : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் (Supreme Court) நவம்பர் 13, 2025 அன்று தள்ளுபடி செய்தது. அதே நேரம் காவிரி நீர் விநியோகத்தில் கர்நாடகா (Karnataka) அரசு நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெளிவாக எச்சரித்துள்ளது. காவிரி நதி நீர் பங்கீட்டில் நீண்டகாலமாக நீடித்து வரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான மோதல் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான திட்டங்களைத் தயாரிக்க மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அந்த அனுமதியை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இரு மாநிலங்களும் தாக்கல் செய்த மனுக்கள் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இரு தரப்பின் வாதங்களையும் கேட்டனர். இதனையடுத்து பேசிய நீதிபதிகள் மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு முன்கூட்டியே திட்டமிட்டது போன்றதாக உள்ளது. இது சரியான நடைமுறை அல்ல” என்று கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க : சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!




மேலும், “இத்திட்ட அறிக்கைக்கு தொடர்பான இறுதி முடிவு காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்குமுறை குழுவும் வழங்கும் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு அமையும். இப்போது தமிழ்நாடு மனுவை விசாரிக்க முடியாது. இது முற்றிலும் தவறான மனு என தெரிவித்து, மனுவை நிராகரித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு
மேலும் பேசிய நீதிபதிகள், காவிரி நீர் விநியோகம் நிபுணர் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற வேண்டும். கர்நாடகா அரசு மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை குழு வழங்கிய விதிமுறைகளை கடைபிடித்து நீரை அனுமதிக்க வேண்டும். மாநிலங்களுக்கு எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை அந்த ஆணையத்தின் முன் வைக்கலாம். அதற்கு ஆணையம் விரைவாக தீர்மானம் எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றாவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க : 30 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் 80,000 பேர் பலி.. காலநிலை அபாய குறியீடு வெளியிட்ட அறிக்கை!
மேலும்,, மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான, ஒப்புதல் அளித்தால், இரு தரப்பும் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, இரு தரப்பிற்கும் சுதந்திரம் உள்ளது. இரு மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட்ட பின்னரே மேகதாது அணை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.