காய்கறி வியாபாரிக்கு அடித்த யோகம்.. லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. நண்பனுக்கும் கொடுப்பேன் என பெருமிதம்!
Vegetable Vendor Won 11 Crore in Lottery | ராஜஸ்தானை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் லாட்டரி வாங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு அவருக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்துள்ளது. அதில் ரூ1 கோடியை அவர் தனது நண்பருக்கு கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர், நவம்பர் 06 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூர் (Raipur) கோட்புலி பகுதியை சேர்ந்தவர் அமித் சேரா. இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் மிக கடுமையாக உழைத்து குடும்பத்தை நடத்தி வந்த அவருக்கு அதிர்ஷடம் கதவை தட்டியுள்ளது. அதாவது அவருக்கு ரூ.11 கோடிக்கு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், காய்கறி வியாபாரிக்கு ரூ.11 கோடி லாட்டரி கிடைத்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காய்கறி வியாபாரிக்கு லாட்டரியில் அடித்த யோகம்
அமித் சேரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மாநில அரசு ரு.11 கோடிக்கான லாட்டரியை வெளியிடப்பட்டு இருந்தது குறித்து அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், லாட்டரி சீட்டு வாங்க அவர் முடிவு செய்துள்ளார். ஆனால், லாட்டரி வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் அவர் தனது நண்பரிடம் உதவி கேட்டுள்ளார். அவர் லாட்டரி வாங்க பணம் கொடுத்த நிலையில், அதன் மூலம் லாட்டரியும் வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க : சத்தீஸ்கரில் பெரும் ரயில் விபத்து – இதுவரை 6 பேர் பலி… மேலும் உயரும் பலி எண்ணிக்கை?




லாட்டரிக்கு ரூ.11 கோடி பரிசு
அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அக்டோபர் 31, 2025 அன்று பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் நடைபெற்றுள்ளது. அதில் அமித் சேரா வாங்கிய லாட்டரிக்கு அவருக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனை அறிந்து அவ்ர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்.. பரபரப்பு சம்பவம்!
பணம் கொடுத்து உதவிய நண்பனுக்கு ஒரு கோடி
தனக்கு கிடைத்த லாட்டரி பரிசு குறித்து பேசிய அமித் சேரா, இது எனக்கு கடவுள் கொடுத்த எதிர்பாராத ஆசிர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதுமட்டுமன்றி, இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்த எனது நண்பன் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.