Viral Video : இந்திய ரயில்கள் தான் பெஸ்ட்.. புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி!
Foreign Tourist Praises Indian Railways | வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தங்களது அனுபவங்கள் குறித்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்திய ரயில் சேவை குறித்து பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பல்வேறு உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்களது அனுபவங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இந்தியாவில் ரயில் சேவை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்திய ரயில் சேவை மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த ரயில் சேவை குறித்து வெளிநாட்டவர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரயில் சேவை தான் சிறந்தது – வெளிநாட்டு சுற்றுலா பயணி
இந்தியாவில் கலாச்சாரம், நிலப்பரப்பு ஆகியவற்றின் மீது ஈர்ப்பு கொள்ளும் வெளிநாட்டவர்கள் பலர் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து நாட்டின் முழுமையான நிலையை தெரிந்துக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி, இந்தியாவில் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய ரயில் சேவை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : பெற்றோரிடம் செல்போனில் பேசிய சிறுவன்.. கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணி, எனக்கு ரயில் நிலையத்தில் எந்த வித சிக்கலும் ஏற்படவில்லை. ரயில் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே ரயில் பரிசோதகர் வந்து எனது டிக்கெட்டை பரிசோதனை செய்தார். அவர் எனது பெயரை உறுதி செய்தார். நான் ஜப்பான், டோக்கியோ ஆகிய நகரங்களில் ரயிலில் பயணம் செய்துள்ளேன். ஆனால், இந்த ரயிலில் இருந்த இட வசதி போல வேறு எந்த ரயிலிலும் இருந்தது இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மனது இளமையாகவே உள்ளது.. 83 வயதில் பஞ்சி ஜம்பிங் செய்த மூதாட்டி.. வைரல் வீடியோ!
இந்திய ரயில் வசதி குறித்து அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கருத்து தெரிவித்து வீடியோ பதிவிட்ட நிலையில், பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.