Viral Video : தீபாவளிக்கு சோன் பப்டி கொடுத்த நிறுவனம்.. ஆத்திரத்தில் வீசி சென்ற ஊழியர்கள்!
Employees Thrown Soan Papdi on Office Gate | தீபாவளிக்கு சில நிறுவனங்கள் போனஸ் வழங்காமல் தங்களது ஊழியர்களுக்கு சோன் பப்டி மட்டும் வழங்கியுள்ளன. அவ்வாறு ஒரு நிறுவனம் சோன் பப்டி வழங்கிய நிலையில், அதன் ஊழியர்கள் அதனை நிறுவனத்தின் வாசலில் தூங்கி எறிந்துள்ளனர்.

இந்தியாவில் சமீபத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ், இனிப்புகள், உடைகள், பரிசுகள் என பல தீபாவளி பரிசுகளை வழங்கினர். இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அந்த வகையில், தீபாவளிக்கு வெறும் சோன் பப்டி மட்டும் கொடுத்ததால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அதனை நிறுவனத்தின் வாசலில் வீசி செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
தீபாவளிக்கு சோன் பப்டி மட்டும் கொடுத்த நிறுவனத்தால் கடுப்பான ஊழியர்கள்
தீபாவளிக்கு நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் போனஸ் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனை பின்பற்றி பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் உடன் கூடிய இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்குகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் போனஸ் வழங்காமல் வெறும் பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்குகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் வெறும் இனிப்புகளை மட்டுமே வழங்குகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு வெறும் சோன் பப்டி மட்டும் கொடுத்த நிலையில், ஆத்திரமடைந்த ஊழியர்கள் சோன் பப்டிகளை நிறுவனத்தின் வாசலில் வீசி செல்லும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஆபத்திலும் இணைபிரியாத காதல்.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Diwali Kalesh
A company gave its employees the famous most hated alleged Mithai called Soan Papdi
The employees threw the Soan Papdi boxes at the gate of the company.
Soan Papdi deserves this insult 🙂
What is your opinion on alleged mithai called soan papdi? pic.twitter.com/HSRPDC322r
— Woke Eminent (@WokePandemic) October 21, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு நிறுவனத்தின் வாசலில் நின்றுக்கொண்டு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சோன் பப்டி பாக்சுகளை வீசுகின்றனர். அந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட சோன் பப்டி பாக்சுகள் உள்ளனர். அதுமட்டுமன்றி, சில ஊழியர்கள் அந்த இடத்தில் நின்றுக்கொண்டு வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சாலையில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நபர்.. ரூ.57,500 அபராதம் விதித்த போலீஸ்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலர் அந்த ஊழியர்களின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் அவர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.