Viral Video : ஆபத்திலும் இணைபிரியாத காதல்.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!
Elderly Couple's Lovable Video Goes Viral | தற்போதைய காலக்கட்டத்தில் காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட ஒருசில ஆண்டுகள் கழித்து காதல் இல்லை என கூறி விவாகரத்து செய்கின்றனர். இந்த நிலையில், வயதான தம்பதி மழை வெள்ளத்தில் இணை பிரியாமல் கட்டி அணைத்தபடி நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால், உலகின் எந்த மூலையில் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கடும் வெள்ளப்பெருக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் வயதான தம்பதி கட்டி அணைத்தபடி நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆபத்திலும் இணைபிரியாத காதல் ஜோடி
அமெரிக்காவின் மெக்சிக்கோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன 65 பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் வயதான ஜோடி ஒன்று வெள்ளத்தில் கட்டியணைத்தபடி நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சிறுவனுக்கு புதிய சைக்கிள் பரிசளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Grandparents embrace life amid chaos, capturing the heart of the internet
Don Esteban and Dona Isabel held hands, hugged, comforting each other while trapped in Mexico’s deadly floods
They were later saved, bringing a glimmer of hope to a devastated community pic.twitter.com/Q7uRDxeeR5
— RT (@RT_com) October 14, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வெள்ளத்தின் மத்தியில் வயதான தம்பதி கட்டி அணைத்தபடி நின்றுக்கொண்டு இருக்கின்றனர். பின்பு அவர்கள் மீட்கப்பட்ட புகைப்படங்களும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கிரேனில் தொங்கியபடி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்த இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், வயதான தம்பதியின் உண்ணதமான காதலை குறித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.