AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Maid's Sweet Gesture To Bengaluru Couple | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் பெங்களூரு தம்பதிக்கு திருமண நாள் பரிசு வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Feb 2026 17:52 PM IST

மனிதர்களுக்கு உண்ணதமான சில குணங்கள் உள்ளன. அவை தான் அன்பு, பாசம், அக்கறை இவையெல்லாம். மாறி வரும் வாழ்க்கை முறையில் மனிதர்கள் இவற்றையெல்லாம் மறந்து வருகின்றனர் என பல விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னும் சில மனிதர்கள் இத்தகைய உயரிய குணங்களுடன் தான் இருக்குகின்றனர். அந்த வகையில், பெங்களூரு தம்பதிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் அளித்த அன்பு பரிசு தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு தம்பதிக்கு பெண் வழங்கிய சிறப்பு பரிசு

நவீன காலத்துக்கு ஏற்ப உறவுகளும் மாறிவிட்டன. முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சிறப்பு தினம் என்றால் அந்த நபருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிப்போம். ஆனால், இப்போது அப்படி அல்ல. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து சொல்லி முடித்துவிடுகிறோம். இத்தகைய காலக்கட்டத்தில் தான் பெண் ஒருவர் தான் பணி செய்யும் வீட்டின் உரிமையாளர்களின் திருமண நாளுக்கு தன்னால் முடிந்த பரிசை வாங்கி கொடுத்து ஆசிர்வதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : குப்பை போட போர்ட்டர் புக் செய்த இளம் பெண்.. இணையத்தை கோபமடைய செய்த வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வீட்டில் வேலை செய்யும் அந்த பெண், அந்த தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து கூற ஒரு சாக்லேட் மற்றும் ரோஸ் வாங்கி வருகிறார். அதனை மிகவும் பாசத்துடன் அவர் அந்த தம்பதிக்கு பரிசளித்து வாழ்த்துகிறார். அதனை வாங்கிக்கொண்டு அந்த தம்பதி நீங்கள் மிகவும் இனிமையானவர் என கூறுகின்றனர். பிறகு அவர்கள் அந்த பெண்ணின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக்கொள்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த பிச்சைக்காரர்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த பெண்ணின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டி கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us