Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : மீட்பு பணிக்கு வராமல் தாமதமாக்கிய அதிகாரிகள்.. 80 கிலோ எடை கொண்ட முதலையை தோலில் சுமந்த நபர்!

Man Carried 80 KG Crocodile on Shoulders | ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் முதலை புகுந்துள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மீட்பு படையினர் அங்கு வராததால் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் முதலையை பிடித்து தனது தோலில் சுமந்து சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மீட்பு பணிக்கு வராமல் தாமதமாக்கிய அதிகாரிகள்.. 80 கிலோ எடை கொண்ட முதலையை தோலில் சுமந்த நபர்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2025 20:47 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகம் முழுவதும் நடைபெறும் பல அசாத்திய நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஒருவர் சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை தனது தோல் மீது சுமந்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதலையை பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வராததால் அந்த நபரே முதலையை பிடித்ததாக அந்த கிராம் மக்கள் கூறுகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள முதலை

ராஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் முதலை ஒன்று புகுந்துள்ளது. முதலை வீட்டிற்குள் வந்தது குறித்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பாம்பு பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த ஹயாட் கான் என்பரிடம் அது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : 5 மணிக்கு மேல் அலுவலகங்கள் இப்படிதான் இருக்கும்.. ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து வீடியோ பதிவிட்ட பெண்!

தகவலின் படி அங்கு தனது குழுவுடன் வந்த ஹயாட், முதலையின் வாயியை டேப்பால் கட்டியுள்ளார். பிறகு 8 அடி நீளம் மற்றும் 80 கிலோ எடை கொண்ட அந்த முதலையை அவர் தானே தனது தோலில் சுமந்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், முதலையை பிடித்த ஹயாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த கிராமம் இரவு நிம்மதியாக உறங்க அவர் காரணமாக மாறிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.