Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : 7 வயது மகனை தண்ணீரில் தள்ளிட்ட இன்ஃப்ளூயன்சர்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!

Influencer Throws Son in Water | இணையத்தில் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது மகனை தண்ணீரில் தூக்கி வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : 7 வயது மகனை தண்ணீரில் தள்ளிட்ட இன்ஃப்ளூயன்சர்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Sep 2025 00:01 AM IST

இன்ப்ளூயன்சர் தந்தை ஒருவர் தனது 7 வயது மகனை தண்ணீரில் தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைராகி வரும் நிலையில்,  அது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த இன்ஃப்ளூயன்சர், தான் ஒரு நல்ல தந்தை என பதிவிட்டுள்ளார். அதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

7 வயது மகனை தண்ணீரில் தூக்கி வீசிய தந்தை

இணையத்தில் தனது மகனை தண்ணீரில் தூக்கி வீசுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ள அந்த நபர், இது பிள்ளைகளை வளர்ப்பதற்கான அறிவுரை அல்ல. இதனை நான் பின்பற்றவும் கூற மாட்டேன். இதனை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்ய மாட்டோம். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை பொருத்து அவர்கள் வளர்கிறார்கள். மலை முகடில் இருந்து குழந்தைகளுக்கு குதிக்க சொல்லிக் கொடுப்பது மிகவும் வித்தியாசமானது. முதல் முக்கியத்துவம் பாதுகாப்புக்கு. இரணாடவது முக்கியத்துவம் கடினமான செயல்களை செய்வதற்கு. மூன்றாவது மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர்.. தைரியமாக தட்டிக் கேட்ட பெண்.. குவியும் பாராட்டு!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Garrett Gee (@garrettgee)

இணையத்தில் வைரலாகும் வீடியோவில் அந்த இன்ஃப்ளூயன்சர் மலை முகடின் மீது இருந்து தனது 7 வயது மகனை தூக்கி வீசுகிறார். அந்த சிறுவன பயத்தில் சற்று தடுமாறி மீண்டும் நீந்த தொடங்குகிறார். உடனே அந்த தந்தை தண்ணீரில் குதிக்கிறார். பிறகுன் அந்த சிறுவன் தானாகவே தண்ணீரில் குதிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : வெறும் ரூ.50-க்கு மருத்துவம்.. இந்தியாவின் மருத்துவ வசதி குறித்து வியந்து வீடியோ பதிவிட்ட வெளிநாட்டு பெண்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் தனது 7 வயது மகனுக்கு அவரது தந்தை தைரியத்தை சொல்லித் தருவதை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நிலையில், சிலர் சிறுவனின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.