Viral Video : சீன பெருஞ்சுவரில் டுரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவு.. வியக்க வைக்கும் வீடியோ!
Drone Food Delivery in Great Wall of China | உலகம் முழுவதும் உணவு டெலிவரி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது உணவு உள்ளிட்ட பொருட்களை நிறுவனங்கள் டுரோன் மூலம் டெலிவரி செய்ய தொடங்கிவிட்டன. அந்த வகையில் சீன பெருஞ்சுவரின் டுரோன் மூலம் உணவு டெலிவரி செய்யப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது அனைத்துமே மிக சுலபமாக மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாக்குவதில்லை. எந்த பொருள் வேண்டும் என்றாலும் அதனை தாங்கள் இருக்கும் இடங்களுக்கே வரவழைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் சீன பெருஞ்சுவரில் டுரோன் மூலம் உணவு டெலிவரி செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீன பெருஞ்சுவரில் டுரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவு
உணவு பொருட்களை ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கே வரவழைத்து சாப்பிடும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஏராளமான பொதுமக்கள் நேரமின்மை, வேலை சுமை உள்ளிட்ட காரணங்களால் செயலிகள் மூலம் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். வீடுகள், அலுவலகங்கள் என எந்த இடத்திற்கு உணவு ஆர்டர் செய்தாலும் டெலிவரி ஊழியர்கள் அதனை முறையாக வெறும் 30 நிமிடங்களுக்குள்ளாகவே டெலிவரி செய்து விடுகின்றனர். இந்த டெலிவரி சேவையின் அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் டுரோன் டெலிவரி சேவை தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனப்பெருஞ்சுவரில் இளம் பெண்ணுக்கு டுரோன் மூலம் உணவு டெலிவரி செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ வாங்க இணையத்தில் நிதி கோரிய பெண்.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் சீன பெருஞ்சுவர் மீது நின்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை நோக்கி டுரோன் ஒன்று வருகிறது. அந்த டுரோனில் அந்த பெண் ஆர்டர் செய்த உணவு வருகிறது. உணவு வந்ததும் அந்த பெண் அதனை பிரித்து சாப்பிடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட நவராத்திரி.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
.இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், தொழில்நுட்பம் அடைந்துள்ள அவளர்ச்சி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.