Viral Video : நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சாக நடனமாடிய டெலிவரி ஊழியர்கள்.. வைரல் வீடியோ!
Delivery Partners Navratri Celebration Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் நவராத்திரி பண்டிகை மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், உணவு டெலிவரி ஊழியர்கள் சிலர் இணைந்து நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வெவ்வேறு நிறுவனங்களின் உணவு டெலிவரு ஊழியர்கள் ஒன்றுக்கூடி நவராத்திரி சிறப்பு கர்பா நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய டெலிவரி ஊழியர்கள்
இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளதுதான் நவராத்திரி. இந்தியாவின் பலவேறு பகுதிகளில் இந்த நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொளு வைத்து வழிபடுவர். அதுமட்டுமன்றி ஆட்டம, பாட்டம், கொண்டாட்டம் என மிகவும் உற்சாகமாக நவராத்திரியை கொண்டாடுவர். அவ்வாறு உர்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் வைரலாகி வரும் நிலையில், டெலிவரி ஊழியர்கள் ஒன்றிணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட நவராத்திரி.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
வைரல் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நவராத்திரி கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உணவு டெலிவரி ஊழியர்கள் சிலர் உற்சாகமாக நடனமாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள டெலிவரி நிறுவனங்களான செப்டோ (Zepto), ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஆகிய டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்று கூடி நடனமாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கொல்கத்தா மழை வெள்ளம்.. மீனை கவ்விக்கொண்டு சுற்றி வந்த பாம்பு.. குடியிருப்பு வாசிகள் அச்சம்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.