Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Snake Hiding Inside the Toilet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் வெஸ்டர்ன் கழிவறையில் கருப்பு நிற நாக பாம்பு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Sep 2025 23:42 PM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் இருக்கும். குறிப்பாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்று நாம் யோசித்து கூட பார்க்காத சில சம்பவங்களின் வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகும். தற்போது அத்தகைய வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் அதிர்ச்சியில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து எட்டி பார்த்த பாம்பு

மனிதர்கள் அவசரமாக பயன்படுத்த கூடிய இடம் என்றால் அது கழிவறை தான். இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதால் சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ வேண்டும் என்றால் உடனடியாக கழிவறைக்கு செல்ல வேண்டும். இத்தகைய அவசரமான சூழலில் நீங்கள் பயன்படுத்தபோகும் கழிவறையில் இருந்து பாம்பு ஒன்று சீரிக்கொண்டு எழுந்து நின்றால் எப்படி இருக்கும். அத்தகைய சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பாட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத Golden Retriever.. உணர்ச்சி பொங்கும் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வெஸ்டர்ன் டாய்லட்டில் இருந்து கருப்பு நிற நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்துக்கொண்டு நிற்கிறது. அதனை சிலர் தடியை கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால், அந்த பாம்பு அந்த டாய்லெட்டில் அப்படியே இருக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.