Viral Video : தொண்டையில் சிக்கிய சுவிங் கம்.. விரைந்து செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய இளைஞர்கள்!
Youth Saves Little Girl's Life | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வியப்பில் ஆழ்த்தும். அந்த வலையில் தொண்டையில் சுவிங் கம் சிக்கிக்கொண்ட சிறுமியை சில இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனிதர்களின் வாழக்கை முறை மாறிகொண்டே வருகிறது. முன்பெல்லாம் பலர் ஒன்று கூடி ஒரு குடும்பமாக, தெருவாக, கிராமமாக வாழந்தனர். ஆனால், தற்போது அப்படியே தலை கீழாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சுயநலமான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். உதவி என்று கேட்டால் கூட செய்வதற்கு பலருக்கு மனமில்லை. இந்த நிலையில் தான் மனிதர்கள் மத்தியில் மனிதாபிமானம் இன்னும் உயிரிப்புடன் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறுமிக்கு உரிய நேரத்தில் உதவிய இளைஞர்கள் – குவியும் பாராட்டு
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் சுயநலமாக சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய கூட முன்வருவதில்லை. அதன் காரணமாக யாரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை. பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருந்தாலும், சில மனிதர்கள் இன்னும் மனிதாபிமானத்தை உயிரிப்புடன் வைத்திருக்கும் நபர்களாக உள்ளனர். அந்த வகையில் சிறுமிக்கு சில இளைஞர்கள் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் நபர்.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
‘When strangers became heroes’
An eight-year-old girl in Kerala was saved by a group of young men after she began choking on Chewing Gum. The child approached them feeling unwell, and they quickly helped her expel the gum.
This should go viral. ❤️ pic.twitter.com/lIbQY9Jcsf
— Gabbar (@Gabbar0099) September 21, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையின் ஓரம் சில இளைஞர்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அந்த சாலையின் மறு பக்கத்தில் சிறுமி ஒருவர் சைக்கிளில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அந்த சிறுமிக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்ட நிலையில் அவர் சில நிமிடங்கள் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஆபத்தை உணர்ந்த அந்த சிறுமி, உடனடியாக அங்கு நின்றுக்கொண்டு இருக்கும் இளைஞர்களிடம் அந்த சிறுமி சென்று உதவி கேட்கிறார். அவர்கள் சிறுமிக்கு உதவி செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.