AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Old Man Doing Blinkit Delivery In Horse | உலகில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், முதியவர் ஒருவர் குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Feb 2026 17:06 PM IST

தற்போதைய சூழலில் தினசரி வாழ்வில் மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய துறைகளில் ஒன்றுதான் கடைசி நேர டெலிவரி சேவைகளை செய்யும் இ காமர்ஸ் (e Commerce) துறை. முன்பெல்லாம் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிய காலம் மாறி, தற்போது வீட்டில் இருந்தே பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்காக ஏராளமான ஊழியர்கள் இரவு, பகல் பார்க்காமல் உழைக்கின்றனர். அவ்வாறு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வீடியோக்கல் சில இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் குதிரையில் பிளிங்கிட் (Blinkit) டெலிவரி செய்யும் முதியவரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்த முதியவர்

ஸ்விக்கி, சொமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்களில் டெலிவரி ஊழியர்களாக ஏராளமான நபர்கள் பணியாற்றுகின்றனர். வாகனம் ஓட்டும் திறன் உள்ளிட்ட ஒருசில தகுதிகள் மட்டுமே இதற்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பகுதி நேரமாக சிலர் இந்த பணியை செய்கின்றனர். பிளிங்கிட், செப்டோ உள்ளிட்ட டெலவரி பணிக்கு மிதிவண்டி வைத்திருந்தாலே போதுமானதாக உள்ள நிலையில், பல் கல்லூரி மாணவர்களும் பகுதி நேரமாக இந்த பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில், முதியவர் ஒருவர் குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இந்திய ரயிலில் சிறப்பான உணவு.. வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ராஜஸ்தானின் நெடுஞ்சாலை ஓரத்தில் முதியவர் ஒருவர் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். குதிரை மீது அமர்ந்திருக்கும் அந்த முதியவர் பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் அணிந்திருக்கும் மஞ்சள் நிற டெலிவரி பையை அணிந்துள்ளார். இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நபர், முதியவர் குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்வதாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்.. உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்!

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ பலவிதமான கருத்துக்களை பெற்று வரும் நிலையில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இயற்கையான முறையில் இதுபோன்று உணவு டெலிவரி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us