Viral Video : பாங்காக்கில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
Bangkok Sinkhole Video Goes Viral on Internet | இணையத்தில் ஒவ்வொரு நாளும் சில அசாதாரன சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாங்காக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு கார்கள், வாகனங்கள் உள்ளே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாங்காக், செப்டம்பர் 24 : தாய்லாந்தின் (Thailand) தலைநகர் பாங்காக்கில் (Bangkok) திடீரென பெரிய பள்ளம் (Giant Sinkhole) உருவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாங்காக்கில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாங்காக்கில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளம் – பீதியில் உறைந்த பொதுமக்கள்
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இன்று (செப்டம்பர் 24, 2025), மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் மிகப்பெரிய ராட்சத பள்ளம் உருவாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சில காரணங்களால் சாலைகளில் சிறிய அளவிலான பள்ளங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு தெருவையே விழுங்கும் அளவிற்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தொண்டையில் சிக்கிய சுவிங் கம்.. விரைந்து செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய இளைஞர்கள்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Bangkok Sinkhole#BANGKOK pic.twitter.com/8vXe9Qfyh5
— Au (@Cam_gold_) September 24, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலை ஒன்றில் திடீரென மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளே வாங்குகிறது. அந்த பள்ளம் மெல்ல மெல்ல விரிவடைந்துக்கொண்டே செல்கிறது. அவ்வாறு பள்ளம் பெரிதாகும் நிலையில், அங்கு சாலையின் ஓரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அந்த பள்ளத்தில் விழுகின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ரயில் ஏசி முதல் கோச்சில் பெட்ஷீட் திருடிய குடும்பம்.. கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்!
விபத்தில் மூன்று பேருக்கு காயம் – அதிகாரிகள் தகவல்
மருத்துவமனைக்கு முன்பு ஏற்பட்ட இந்த மிகப்பெரிய பள்ளம் அளவில் 30-க்கு 30 மீட்டர் அகளத்தில் உள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சில வாகனங்கள் சேதமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.