Viral Video : கிரேனில் தொங்கியபடி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்த இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
Crane Pre-Wedding Photoshoot Video Goes Viral on Internet | மிகவும் வித்தியாசமாக ப்ரீ வெட்டிங் மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் எடுக்கும் பழக்கம் இந்திய இளம் ஜோடிகள் மத்தியில் பரவலாக உள்ளது. அந்த வகையில், கிரேனில் தொங்கியபடி இளம் ஜோடி போட்டோஷூட் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை திருமணங்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், சமீப காலமாக ப்ரீ வெட்டிங் (Pre Wedding) மற்றும் போஸ்ட் வெட்டிங் (Post Wedding) போட்டோஷீட்களை பிரம்மா33870ண்டமாகவும், வித்தியாசமாகவும் எடுக்கும் வழக்கம் இந்திய இளம் ஜோடிகள் மத்தியில் பரவலாக உள்ளது. அந்த வகையில், இளம் ஜோடி ஒன்று கிரேனில் பறந்தபடி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிரேன் மூலம் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்த இளம் ஜோடி
சமீப காலமாக இந்தியாவில் ப்ரீ வெட்டிங் மற்றும் போட்ஸ் வெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் மிக பரவலாக அதிகரித்து வருகிறது. இளம் ஜோடிகள் தங்களுக்கு பிடித்தபடி மிகவும் வித்தியாசமான தோற்றம், இடங்களுக்கு சென்று ப்ரீ வெட்டிங் மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்களை நடத்துகின்றன. இவ்வாறு மிகவும் வித்தியாசமாக நடைபெறும் போட்டோஷூட்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் ஜோடி கிரேன் மூலம் போட்டோஷூட் எடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : 5 மணிக்கு மேல் அலுவலகங்கள் இப்படிதான் இருக்கும்.. ஐரோப்பாவின் வேலை கலாச்சாரம் குறித்து வீடியோ பதிவிட்ட பெண்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கிரேன் வாகனம் ஒன்று சாலையில் நின்றுக்கொண்டு இருக்கிறது. அந்த கிரேனின் நுணியில் இளம் ஜோடி ஒன்று மண கோளத்தில் கயிறு கட்டி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவர்களின் தலைக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கின்றன. அவர்கள் கிரேனில் தொங்கியபடி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : லண்டன் சாலைகளில் சமோசா விற்கும் இந்தியர்.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இதுதான் இந்த ஆண்டின் சிறந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.