Viral Video : பாலில் குளித்து, கேக் வெட்டி விவாகரத்தை கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
Man Celebrates His Divorce With Milk Bath | இந்தியாவில் சமீப காலமாகவே விவாகரத்தை கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக உலகின் எந்த மூலையில், என்ன நடந்தாலும் அது மிக விரைவாக உலகிறகு தெரிய வந்துவிடுகிறது. இவ்வாறு இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் பால் குளியல் எடுத்து, கேக் வெட்டி தனது விவாகரத்தை கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவகாரத்தை பாலில் குளித்து கொண்டாடிய நபர்
இந்தியாவில் சமீப காலமாக திருமண விழாக்கலை கொண்டாடுவதை போல விவாகரத்தை கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடுமையான, மன மகிழ்ச்சி இல்லாத திருமண உறவில் இருக்கும் நபர்கள் அதில் இருந்து விவாகரத்து பெற்று வரும் நிலையில், அதனை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இவ்வாறு பலரும் விவாகரத்தை கொண்டாடுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒருவர் பாலில் குளித்து, கேக் வெட்டி விவாகரத்தை கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சாக நடனமாடிய டெலிவரி ஊழியர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒருவர் பாலில் குளிக்கிறார். பிறகு தனது அறைக்கு சென்று திருமணத்திற்கு எடுத்த உடை, காலணி ஆகியவற்றை அணிந்துக்கொள்கிறார். பிறகு மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்துக்கொண்டு கேக் வெட்டுகிறார். அந்த கேக்கில் ஹாப்பி விவாகரத்து. 120 கிராம் தங்கம், 18 லட்சம் பணம் என எழுதியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கோயிலை காவல் காத்த சிங்கம்?.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள அந்த நபர், மகிழ்ச்சியாக இருங்கள். உங்களை மன உளைச்சலுக்கு உட்படுத்திக்கொள்ளாதீர்கள். 120 கிராம் தங்கம், 18 லட்சம் பணம் உள்ளது. நான் தனியாக இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன், சுதந்திரமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.