Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இரவில் இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த ரேப்பிடோ டிரைவர்.. குவியும் பாராட்டு!

Rapido Driver Guards Young Woman | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், இளம் பெண் ஒருவரை இரவு நேரத்தில் ரேப்பிடோ ஓட்டுநர் பாதுகாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : இரவில் இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த ரேப்பிடோ டிரைவர்.. குவியும் பாராட்டு!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Sep 2025 00:15 AM IST

சமூக ஊடக செயலிகள் காரணமாக ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் விதமாக இருந்தாலும், சில வீடியோக்கள் மன மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும், வியப்பூட்டும் வகையிலும் இருக்கும். அத்தகைய வீடியோக்களில் ஒன்றுதான் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரவில் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த ரேப்பிடோ டிரைவர்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட போக்குவரத்து செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவசர தேவைகளுக்கு, உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என பல தேவைகளுக்காக பொதுமக்கள் இந்த சேவையை தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என இந்த சேவைகளை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், வீட்டின் சாவியை தொலைத்த பெண்ணுக்கு ரேப்பிடோ டிரைவர் காவலுக்கு  நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பெல்ஜியம் சாலையில் களைக்கட்டிய கர்பா நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ