Viral Video : சிறுவனுக்கு புதிய சைக்கிள் பரிசளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. குவியும் பாராட்டு!
Foreign Tourist Gifts Bicycle to Indian Boy | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியர்களுடன் நெருங்கி பழகுவது, பரிசு வழங்குவது உள்ளிட்ட அன்பான செயல்களை செய்வர். அந்த வகையில், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்திய சிறுவன் ஒருவருக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய சிறுவனுக்கு புதிய சைக்கிள் பரிசளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
இந்தியாவின் கலாச்சாரம், உடை, நாகரிகம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு கொள்ளும் வெளிநாட்டுவர்கள் சிலர் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவர் இந்திய சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பாலில் குளித்து, கேக் வெட்டி விவாகரத்தை கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையில் நின்றுக்கொண்டு இருக்கும் சுற்றுலா பயணி ஒருவரிடம் அந்த வெளிநாட்டவர் புதிய சைக்கிள் வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் ஆம் என பதில் அளிக்கவே அந்த நபர் உடனடியாக அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்கிறார். அங்கு அந்த சிறுவனுக்கு ஏற்ற சைக்கிளை எடுத்து கொடுக்க கூறி அவர் கூறுகிறார். அவர்களும் சிறுவனுக்கு ஏற்ற சைக்கிள் ஒன்றை எடுத்து தருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : Nun வேடத்தில் கர்பா நடனமாடிய இளம் பெண்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுத்ததும் அந்த வெளிநாட்டவர் சிறுவனின் தந்தையை சந்திக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் அந்த சிறுவன் வீட்டில் தனது தந்தை இல்லை என கூறியதும் அவரது தாயை பார்க்க இருவரும் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் மனதை பாராட்டு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரூ.24,000-க்கு சைக்கிள் விற்பனை செய்தது மோசடி என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.