Viral Video : சாலையில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நபர்.. ரூ.57,500 அபராதம் விதித்த போலீஸ்!
Dangerous Car Stunt Video Goes Viral on Internet | இணையத்தில் அவ்வப்போது பலர் வாகனங்களில் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு ஸ்டண்ட் செய்த நபருக்கு நொய்டா காவல்துறை ரூ.57,500 அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் மிக கடுமையான சாலை விதிகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், சிலர் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, ஸ்டண்ட் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் பெயரில் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நபருக்கு போலீசார் ரூ.57,500 அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் ஆபத்தான முறையில் காரில் ஸ்ட்ண்ட் செய்த நபர்
இந்தியாவில் பொதுமக்கள் சாலையில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. வேகமாக வாகனம் ஓட்ட கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என பல விதிகள் உள்ளன. ஒருவேளை சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் ஒருவர் காரில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நிலையில், அவருக்கு போலீசார் ரூ.57,500 அபராதம் விதித்துள்ளனர்.




இதையும் படிங்க : Viral Video : பெண் பயணியின் மொபைல் போனை பிடுங்கிய ரயில்வே போலீஸ்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A guy performed stunts with his car on
the streets of Greater Noida. 🚗💨
Noida Traffic Police took action and imposed a fine of ₹57,500.
Good Job, @Noidatraffic 👏👏 pic.twitter.com/Qn1nmGpmJj— Greater Noida West (@GreaterNoidaW) October 10, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், பொதுமக்கள் பயணம் செய்யும் சாலை ஒன்றில் கருப்பு நிற கார் ஒன்று மிக வேகமாக செல்கிறது. பிறகு அந்த கார் சுழன்று சுழன்று சாகசம் செய்கிறது. இந்த வீடியோ காட்சிகளுக்கு பிறகு அந்த வண்டி எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வருகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கிரேனில் தொங்கியபடி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்த இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், காவல்துறையின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.