AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலர் தின ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிட்ட ஹேப்பி ராஜ் படக்குழு

Happy Raj Movie New Poster: தமிழ் சினிமவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியான படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெறுவது போல நடிப்பில் வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

காதலர் தின ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிட்ட ஹேப்பி ராஜ் படக்குழு
ஹேப்பி ராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Feb 2026 17:18 PM IST

தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக பல இசையமைப்பாளர் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். மேலும் வெயில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் வெளியான படங்கள் தொடர்ந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் நடிகராகவும் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் நாயகனாக பல கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதன்படி சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் ஜாலியான இளைஞர்களை கவரும் விதமான கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது.

காதலர் தின ஸ்பெஷல்… போஸ்டர் வெளியிட்ட ஹேப்பி ராஜ் டீம்:

அந்த வகையில் இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கி வரும் படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நடிகர் அப்பாஸ். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படக்குழுவினர் காதலர் தின ஸ்பெஷலாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… Mari Selvaraj: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!

ஹேப்பி ராஜ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Pallichattambi: டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ‘காட்டு செண்பகமே’ பாடல் வெளியீடு!

Follow Us