Viral Video : ரயிலில் மீண்டும் கழிவி பயன்படுத்தப்பட்ட Use and Throw கப்புகள்?.. வைரலாகும் வீடியோ!
Use and Throw Containers Reused in Train | ரயிலில் பயணிகளுக்கு யூஸ் அண்ட் த்ரோ கப்புகளில் உணவு வழங்கப்படும். இந்த நிலையில், அந்த பெட்டிகள் கழிவி மீண்டும் பயன்படுத்தப்படுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகை சுற்றில் நடைபெறும் சில தவறான மற்றும் ஆபத்தான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு பல பிரச்னைகள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயில்களில் வழங்கப்படும் உணவுகளுக்கான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய Use and Throw அலுமினியம் பாக்சுகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்துவதற்கு தயார் செய்யப்படுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ரயிலில் மீண்டும் பயன்படுத்த தயார் செய்யப்பட்ட Use and Throw கப்புகள்?
ரயில் பயணங்களின் போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படும். அந்த உணவுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய Use and Throw அலுமினியம் பாக்சுகளில் வழங்கப்படும். அதனை வாங்கி உணவை உண்ட பிறகு பயணிகள் அதனை குப்பை தொட்டியில் அதனை வீசிவிடுவர். அதன் ஆயுள் காலம் அவ்வளவுதான். ஆனால், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அந்த பாக்சுகள் மீண்டும் கழிவி சுத்தம் செய்யப்பட்டு உணவு வழங்க தயார் செய்யப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சாலையில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த நபர்.. ரூ.57,500 அபராதம் விதித்த போலீஸ்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
रील मंत्री जी, यही है आपकी सुविधा 👇🏼
ये वीडियो अमृत भारत एक्सप्रेस (16601) का है- जहां गंदे डिस्पोजेबल फूड कंटेनर्स को धोकर दोबारा खाना देने के लिए रखा जा रहा है।
जनता से टिकट पर फुल वसूली की जाती है, लेकिन दूसरी ओर ये घटिया हरकत।
शर्म आनी चाहिए। pic.twitter.com/xePX8CKc7O
— Congress (@INCIndia) October 19, 2025
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்த செயலுக்கு கணடனம் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள ஐஆர்சிடிசி, குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதற்காகவே அவை கழுவப்பட்டுள்ளன. மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.