AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்.. வீரர்களின் சேவை என்றும் நம் உணர்வில் பதிந்திருக்கும்.. பிரதமர் மோடி

Pulwama Attack 7th Anniversary: புல்வாமா தாக்குதல் இந்தியர்களின் மனதில் அழியாத காயமாக இருந்தாலும், அது நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்று உணர்வையும் வலுப்படுத்திய ஒரு தருணமாகவும் பார்க்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்.. வீரர்களின் சேவை என்றும் நம் உணர்வில் பதிந்திருக்கும்.. பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Feb 2026 13:17 PM IST

டெல்லி, பிப்ரவரி 14: புல்வாமா தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார். புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று பிப்ரவரி 14 அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்ஃபிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்:

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தினர். புல்வாமா தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி, இந்த வீரமரணத்தை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் உள்ளிட்ட பல இடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. வீரர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

நன்றி தெரிவிக்கும் நாள்:

புல்வாமா தாக்குதல் இந்தியர்களின் மனதில் அழியாத காயமாக இருந்தாலும், அது நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்று உணர்வையும் வலுப்படுத்திய ஒரு தருணமாகவும் பார்க்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். இந்த நினைவு தினம், நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியை மீண்டும் வலியுறுத்தும் நாளாகவும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க: கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!

வீரர்களை நினைவுகூர்ந்த மோடி:

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், 2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலைக் கண்டு உத்வேகம் பெறுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Follow Us