Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாடிக்கையாளர்களிடம் மாறி மாறி மன்னிப்பு கோரும் நிறுவனங்கள்.. என்ன நடக்குது?

Indian Companies Apology Trend | சமீப காலமாக ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் மன்னிப்பு கடிதங்களை வெளியிட்டு வருகின்றன. எந்த தவறையும் செய்யாமல் அவர்கள் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், தவறே செய்யாமல் அந்த நிறுவனங்கள் மன்னிப்பு கேட்பது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களிடம் மாறி மாறி மன்னிப்பு கோரும் நிறுவனங்கள்.. என்ன நடக்குது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Nov 2025 14:03 PM IST

ஒருவர் தவறு செய்துவிட்டால் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயமாக உள்ளது. இன்னும் சில சமயங்களில் தண்டனைக்குறிய குற்றம் செய்யும் நபர்கள் மீது அதற்கான தண்டனையும் வழங்கப்படும். நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என யார் குற்றம் செய்தாலும், அவர்கள் செய்தது குற்றம் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்பர். ஆனால், கடந்த சில நாட்களாக வோல்க்ஸ்வேகன் (Volkswagen), ரிலையன்ஸ் (Reliance) உள்ளிட்ட இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பொதுவெளியில் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் எந்தவித தவறையும் செய்யவில்லை. பிறகு ஏன் இந்த நிறுவனங்கள் மன்னிப்பு கேட்கின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிறுவனங்கள் மாறி மாறி மன்னிப்பு கேட்க காரணம் என்ன?

பொதுவெளியில் மன்னிப்பு கடிதம் வெளியிட்டு வரும் இந்த நிறுவனங்கள் உண்மையாக எந்த தவறையும் செய்யவில்லை. பிறகு ஏன் அவர்கள் மன்னிப்பு கடிதத்தை வெளியிடுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் தான் மார்க்கெட்டிங் ஸ்டேடர்ஜி (Marketing Strategy). அந்த நிறுவனங்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என கூறவில்லை. மாறாக அவை பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பையும் மீறி (Exceeding Expectations) சேவைகளை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளனர். அதாவது, பொதுமக்கள் தங்களிடம் இருந்து எதிர்ப்பார்த்ததை விடவும் தாங்கள் சிறப்பான சேவையை வழங்கியதாகவும், அதற்காக தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : 73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு.. SIR-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் பெருமிதம்!!

இந்த டிரெண்ட் பிரபலமாக காரணம் என்ன?

இந்த டிரெண்ட் முதன் முதலில் 2024 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு உலகம் முழுவதும் இது பிரபலமாகியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. அதாவது,  ரிலையன்ஸ் டிஜிட்டல், அதானி அம்புஜா சிமெண்ட், ஹல்திரம்ஸ் மற்றும் பனானா லீஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த டிரெண்டை பயன்படுத்தி தங்களது மன்னிப்பு கடிதங்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது இதுதான் இந்தியாவில் பேசுபொருளாக உள்ளது.