உங்கள் பிரிட்ஜ் கூலிங்க் ஆகவே இல்லையா.. இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்.. உடனே செக் பண்ணுங்க!
Is Your Fridge is Not Cooling Well | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் பிரிட்ஜ் பயன்படுத்துகின்றனர். பலர் கூலிங் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், பிரிட்ஜில் கூலிங் கோளாறு ஏற்பட நாம் செய்யும் சில தவறுகள் முக்கிய காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் (Fridge) உள்ளது. காய்கறி, பழங்கள், இறைச்சி என உணவு பொருட்கள் கெட்டுப்போகமல் இருக்க இந்த பிரிட்ஜில் வைத்து அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பிரிட்ஜ்கள் குளிர்ச்சி தன்மையை வெளியிடுவதன் காரணமாக உணவு பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலையில், பெரும்பாலான நபர்கள் தங்கள் பிரிட்ஜ் கூலிங்காகவில்லை என புகார் கூறுவர். அவ்வாறு பிரிட்ஜ் கூலிங்காகமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரிட்ஜ் கூல் ஆகாமல் இருக்க இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்
ஒருசில தவறுகள் செய்வதன் மூலம் பிரிட்ஜ் கூல் ஆகாமல் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்ஜ் காஸ்கெட்
உங்கள் பிரிட்ஜ் கதவின் காஸ்கெட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது ஓட்டைகள் இருந்தால் பிரிட்ஜின் கூலிங் நிலையாக இருக்காது. இதன் காரணமாக மின்சாரமும் அதிக அளவு பயன்படுத்தப்படும்.




டோர்களை சரியாக மூட வேண்டும்
பிரிட்ஜின் டோர்களை முறையாக மூடாமல் இருப்பது பிரிட்ஜுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதாவது பிரிட்ஜ் டோர்கள் முறையாக மூடப்படாத பட்சத்தில் அது கூலிங் சக்தியை உருவாக்க அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக மிக விரைவாக பிரிட்ஜ் பழுதாகிவிடும்.
இதையும் படிங்க : மொபைல் சார்ஜரில் ஏன் இரண்டு பின்கள் மட்டுமே உள்ளன?.. உங்களுக்கு தெரியுமா?
சரியான வெப்பநிலை
உங்கள் பிரிட்ஜில் சரியான வெப்பநிலை உள்ளதா என்பதனை சோதனை செய்வது அவசியமாகிறது. அதாவது பிரிட்ஜின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆகவும், பிரீசரின் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசாகவும் இருக்கவேண்டும் என்பதனை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
அதிகமான பொருட்களை வைக்க கூடாது
பெரும்பாலான பொதுமக்கள் அனைத்து பொருட்களையும் எடுத்து பிரிட்ஜில் அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். இதன் காரணமாக பிரிட்ஜின் குளிர்ச்சி தன்மை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே பிரிட்ஜில் பொருட்களை வைக்கும்போது நெரிசலாக வைக்காமல் இடைவெளி விட்டு வைக்கவேண்டும். அப்போதுதான் குளிர்ச்சி தன்மை சமாமன அளவில் அனைத்து பொருட்களுக்கும் சென்று சேரும்.
இதையும் படிங்க : வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 பணத்தை எடுத்த வங்கி.. பொறுப்பை ஏற்க மறுத்ததால் பெண் அதிர்ச்சி!
டிஃபிரோஸ்டிங் செய்ய வேண்டும்
பிரிட்ஜ் பிரீசரில் படியும் கடுமையான ஐஸ் கட்டிகளை அவ்வப்போது நீக்கம் செய்வது முக்கியமானதாக உள்ளது. காரணம் பிரீசரில் படியும் கடுமையான ஐஸ் கட்டிகள் பிரிட்ஜை எளிதில் பழுதாக்கிவிடும்.