Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் போனுக்கு ஸ்கிரீன் புரொடக்டர் வாங்க போறீங்களா? எது சிறந்தது?

Smartphone protection tips :  உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் ஸ்கிரீன் புரொடக்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எது வலிமையானது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இந்த ஸ்கிரீன் புரொடக்டர்களில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எது சிறந்தது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் போனுக்கு ஸ்கிரீன் புரொடக்டர் வாங்க போறீங்களா? எது சிறந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2025 16:07 PM IST

இப்போதெல்லாம், ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஆனால், அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். போன் கீழே விழுந்தால், முதலில் பாதிப்படைவது அதன் ஸ்கிரீனாகத் (Screen) தான் இருக்கும். இதனால் நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் போனையே மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம். இந்த சூழ்நிலையில் ஒரு ஸ்கிரீன் புரொடக்டர் இந்த சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மக்கள் வெவ்வேறு விலைகளில் ஸ்கிரீன் புரொடக்டர் பயன்படுத்துகிறார்கள். அவை வெவ்வேறு விலைகளில் வருகின்றன. குறிப்பாக ரூ.100க்கு கூட ஸ்கிரீன் புரொடக்டர்கள் கிடைக்கின்றன. எனவே, ஸ்கிரீன் புரொடக்டர்களில் எவை, நம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு எது சிறந்தது என்பதைப் பார்ப்போம்.

டெம்பர்டு கிளாஸ்

டெம்பர்டு கிளாஸ்  மிகவும் வலிமையானவை. அவை உங்கள் போன் உடைவது  மற்றும் கீறல்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. சில டெம்பர்டு கிளாஸில் சிறப்பு அம்சங்கள் உள்ளன, அதாவது கண்ணை கூசும் அளவுக்கான வெளிச்சத்தை குறைக்கும் தொழில்நுட்பம்  வழங்கப்படுகின்றன. மேலும் உங்கள் பிரைவசியை பாதுகாக்கும் வகையில் பயணங்களின்போது உங்கள் போனை மற்றவர்கள் பார்ப்பதை தடுக்கும் தொழில்நுட்பமும் சந்தையில் உள்ளது. ஆனால் அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அவை சற்று தடிமனாக இருப்பதால், உங்கள் போனின் டிஸ்பிளேவை நீங்கள் சரியாகப் பார்க்க முடியாமல் போகலாம்.

இதையும் படிக்க :  யுபிஐ-ல் வருகிறது ஏஐ.. இனி இந்த சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்!

தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன்

இது ஒரு வகை பிளாஸ்டிக் திரைப் பாதுகாப்பு. இது காட்சியை சிறிய கீறல்களில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் ஸ்கிரீனில் சிறிய கீறல்களை ஏற்பட்டால்,  காலப்போக்கில் அவற்றை சரிசெய்ய முடியும். இது ஸ்கிரீனை முழுவதுமாக மூடுகிறது. ஆனால் அதன் நிறம் சிறிது மங்கக்கூடும், மேலும் அது தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்காது.

பாலிஎத்திலீன் டெரெப்தாலேட்

இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஸ்கிரீன் புரொடக்டர்கள் மெல்லியதாக இருக்கும். இதனை பயன்படுத்தும்போது, அது உங்கள் போனில் இருப்பதை நீங்கள் உணர மாட்டீர்கள். இருப்பினும், அவை அதிக பாதுகாப்பை வழங்காது. உங்கள் தொலைபேசியின் திரை வளைந்திருந்தால், அவை முழு விளிம்பையும் மறைக்காது. இதனை பயன்படுத்துவதால் உங்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது.

நானோ லிக்விட்

நானோ லிக்விட் ஸ்கிரீன் புரொடக்டர் என்பது உங்கள் ஸ்கிரீனில் மேல் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு திரவமாகும். இது சிலிக்கான் டை ஆக்சைடால் ஆனது. இதனை பயன்படுத்தும்போது உங்கள் போனை கீறல்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை எந்த தொலைபேசியிலும் பயன்படுத்தலாம், ஆனால் இது அதிக பாதுகாப்பை வழங்காது. இது ஸ்கிரீனில் காய்ந்தவுடன் அகற்றுவதும் கடினம்.

இதையும் படிக்க : பிளைட் மோடை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?.. அட இது தெரியாம போச்சே!

எது சிறந்தது?

இது உங்கள் பட்ஜெட்,  போன் மாடல் மற்றும் உங்கள் தேவைகளைப் பொறுத்தது. நீங்கள் அதிக பாதுகாப்பை விரும்பினால், டெம்பர்டு கிளாஸ் சிறந்தது. இது அதிக விலை கொண்டது, ஆனால் கீறல்கள் மற்றும் போன் கீழே விழுந்து டிஸ்பிளே பாதிப்பு போன்றவற்றை எதிர்க்கிறது.  மலிவான மற்றும் இலகுவான ஆப்சனை நீங்கள் விரும்பினால், நீங்கள் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன்  அல்லது பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் பிளாஸ்டிக் ஆகியவற்றை தேர்வுசெய்யலாம், ஆனால் இவை குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன.