முதலீட்டு மோசடியில் சிக்கிய நிதி நிறுவன மேலாளர்.. ரூ.5 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி!
Man Lost 5 Crore in Investment Scam | இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நிதி நிறுவன மேலாளர் ஒருவர் முதலீடு மோசடியில் ரூ.5 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மும்பை, அக்டோபர் 18 : மும்பையில் (Mumbai) நிதி நிறுவன மேலாளர் ஒருவர் முதலீடு மோசடியில் சிக்கி ரூ.5 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மொபைல் எண் ஒரு குழுவில் இணைக்கப்பட்ட நிலையில், அதில் நடைபெற்ற உரையாடல்களை உண்மை என நம்பி அவர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். இந்த நிலையில், முதலீட்டு மோசடியில் நிதி நிறுவன மேலாளர் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதலீட்டு மோசடியில் ரூ.5 கோடி பணத்தை இழந்த நிதி நிறுவன மேலாளர்
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் எண் வர்த்தகம் தொடர்பான ஒரு குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இருந்தவர்கள் வர்த்தகம் மூலம் தங்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாக கூறியுள்ளனர். இதற்கிடையே அந்த குழுவில் இருந்த நபர் ஒருவர் நிதி நிறுவன மேலாளரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
இதையும் படிங்க : UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?




ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய சொன்ன நபர்
நிதி நிறுவன மேலாளரிடம் பேசிய அந்த நபர், தாங்கள் கூறும் செயலி மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை அப்படியே நம்பிய அந்த மேலாளர் அதன்படி முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். அவர் சிறிது சிறிதாக முதலீடு செய்து வந்த நிலையில், அதிக லாபம் கிடைத்துள்ளதாக அந்த செயலியில் காட்டி வந்துள்ளது. அதனையும் அவர் உண்மை என நம்பியுள்ளார்.
இதையும் படிங்க : MappIs : கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக அறிமுகமான Mappls.. அமெரிக்க வேலையை உதறிவிட்டு இந்தியர் செய்த சாதனை!
பணத்தை எடுக்க முயன்றபோது தெரிய வந்த உண்மை
அவர்கள் கூறிய அந்த செயலியில் நிதி நிறுவன மேலாளர் ரூ.5 கோடி வரை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், தான் முதலீடு செய்த பணம் மற்றும் அதற்கான லாபம் ஆகியவற்றை அவர் தனது வங்கி கணக்கில் இருந்து மாற்ற முயன்றுள்ளார். அப்போது தான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.