தீபாவளி சேலில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
Smartphones Under 10,000 Rupees in Diwali Sale | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகின்றன. இந்த நிலையில், தீபாவளி சலுகையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000-க்கு குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தான் பல நிறுவனங்கள் தீபாவளி சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி சேலில் ரூ.10,000-க்கும் குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளி சேலில் ரூ.10,000-க்கும் கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
iQoo Z10 Lite 5G
இந்த iQoo Z10 Lite 5G ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் மீடியாடெக் 6300 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50 எம்பி மற்றும் 2 எம்பி கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கம் 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.9,982-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




இதையும் படிங்க : தீபாவளியை முன்னிட்டு பட்ஜெட் விலை அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம் 17.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Vivo T4 Lite 5G
விவோ நிறுவனத்தின் இந்த Vivo T4 Lite 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் 6300 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50 எம்பி மற்றும் 2 எம்பி கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கம் 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Poco M7 5G
போக்கோ நிறுவனத்தின் இந்த Poco M7 5G ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 4 ஜென் 2 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கம் 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் வெறும் ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : நள்ளிரவில் துவங்கும் ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல் – ஐபோன் 16 முதல் ரியல்மி 15 புரோ வரை – அதிரடி தள்ளுபடிகள்
Samsung Galaxy M06 5G
சாம்சங் நிறுவனத்தில் இந்த Samsung Galaxy M06 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் 6300 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கம் 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வெறும் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.