கூகுள் குரோமை பின்னுக்கு தள்ளிய சோஹோவின் உலா.. அப்படி என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது?
Zoho Ula Browser Beats Google Chrome | கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் பிரவுசர் தான் இதுவரை உலக மக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த முன்னணி பிரவுசராக இருந்தது. இந்த நிலையில், சோஹோ நிறுவனத்தின் உலா செயலி தற்போது கூகுள் குரோமை முந்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சோஹோ (Zoho) நிறுவனத்தின் அரட்டை (Arattai) செயலி வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அதனை தொடர்ந்து அதே நிறுவனத்தின் புதிய தேடுபொறி செயலியான உலா (Ulaa), தேடுபொறி ஜாமபவானாக விளங்கி வந்த கூகுள் குரோமை (Google Chrome) பின்னுக்கு தள்ளியுள்ளது. இது உலக பயனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதே சமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திறகான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் நம்பர் 1 ஆக் அவளம் வந்த கூகுள் குரோம்
கூகுள் நிறுவனத்தின் தேடுபொறியாக உள்ள கூகுள் குரோம் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அது ஒரு தேடுபொறி என்பதை தாண்டி பொதுமக்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான செயலியாக மாறிவிட்டது. சந்தேகங்கள், குழப்பங்கள், தீர்வுகள் என அனைத்தையும் பொதுமக்கள் அதில் தேடி வந்தனர். இந்த அளவுக்கு கூகுள் குரோம் பொதுமக்கள் வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்த நிலையில், அந்த இடத்தை தற்போது உலா தட்டி பறித்துள்ளது.
இதையும் படிங்க : ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி ரீஸ்களை மொழிப்பெயர்க்கலாம்.. மெட்டா வெளியிட்ட அசத்தல் அம்சம்!




கூகுள் குரோமை மிஞ்சிய உலா – காரணம் என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலியை அரட்டை செயலி முந்தியதை போல, தற்போது குரோம் செயலியை உலா முந்தியுள்ளது. இந்த உலா வெப் பிரவுசர் கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரி ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக மாறியுள்ளது. கூகுள் குரோமில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இதில் இருக்கிறது என கேள்வி எழலாம். அதற்கு பதிலாக உலா பிரவுசரின் தரவு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது பலரையும் ஈர்த்துள்ளதன் காரணமாக தான் தற்போது கூகுள் குரோமை உலா முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அப்போ உடனடியாக இதை டிரை பண்ணுங்க!
உலாவின் பாதுகாப்பு அம்சம் ஏன் சிறந்தது?
உலா தொழில்நுட்ப ரீதியாக குரோமின் கட்டமைப்பை பயன்படுத்தினாலும், அதன் முக்கிய நோக்கம் தரவு சேகரிப்பில் இருந்து விலகி இருப்பதாக உள்ளது. இது குறித்து கூறியுள்ள சோஹோ நிறுவனம் உலா பிரவுசர் பயனர்களின் தரவுகளை சேகரிப்பது, சேமிப்பது அல்லது விற்பனை செய்வது கிடையாது என்று கூறியுள்ளது. இதன் காரணமாக பயனர்களின் தரவுகளை சேகரித்து விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் கூகுள் போன்ற தேடுபொறிகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.