AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காரடையான் நோன்பு 2026.. விரத முறைகள் மற்றும் வழிபாட்டு ரகசியங்கள்..

karadaiyan nombu 2026: விரதத்தின் முக்கியத்துவம்: "கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும்" என்ற சாஸ்திர விதியின்படி, இந்த விரதத்தை மேற்கொள்வது குடும்ப ஒற்றுமை மற்றும் கணவரின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். விரதம் இருப்பது உடல் சார்ந்த சிரமங்களைத் தந்தாலும், அது மனதிற்கு ஒரு தெளிவையும், உற்சாகத்தையும், நேர்மறை எண்ணங்களையும் தருகிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Mar 2026 14:26 PM IST
ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடும் பண்டிகைகளில் 'காரடையான் நோன்பு' முக்கியமானது. வரவிருக்கும் மார்ச் 14-ம் தேதி காரடையான் நோன்பு கொண்டாடப்பட உள்ளது. காரடையான் நோன்பு என்பது பொதுவாக சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காகவும், மாங்கல்ய பலத்திற்காகவும் மேற்கொள்ளும் ஒரு சடங்கு. காலங்காலமாகப் பின்பற்றப்படும் இந்த நோன்பினைச் செய்யத் தவறினால் கணவருக்கு ஏதேனும் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ அல்லது ஆயுள் குறைந்துவிடுமோ என்ற அச்சம் பல பெண்களிடம் இன்றும் உள்ளது.

1 / 5
ஒரு மனிதனின் பிறப்பு என்னைக்குத் தீர்மானிக்கப்படுகிறதோ, அன்னைக்கே அவனது இறப்பும் (ஆயுள்) தீர்மானிக்கப்படுகிறது. இது உலகளாவிய விதி. எனவே, "ஒரு பூஜையைச் செய்யத் தவறினால் கணவரின் ஆயுள் குறையும்" என்று எண்ணுவது முற்றிலும் தவறு. இறைவழிபாடு என்பது ஒரு பெண்ணின் மன அமைதிக்காகவும், தன் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திற்காகவும் செய்யப்பட வேண்டுமே தவிர, பயத்தின் அடிப்படையில் செய்யப்படக்கூடாது.

2 / 5
காரடையான் நோன்பின் பின்னணி: சத்தியவான்-சாவித்திரி சரித்திரத்தோடு தொடர்புடையது இந்த நோன்பு. கணவனின் உயிரைக் காக்க சாவித்திரி கடும் விரதம் இருந்து, விதியையும் வென்ற வரலாற்றை இது நினைவுபடுத்துகிறது. காட்டில் இருந்தபோது 'கார் அரிசி' மற்றும் வெல்லம் கொண்டு அடை செய்து அம்பாளுக்குப் படைத்து வழிபட்டதே இந்த நோன்பின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

3 / 5
வழிபாட்டு முறைகள்: மார்ச் 14, 2026 அன்று இரவு 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் இந்த நோன்பினை மேற்கொள்வது சிறந்தது. வீட்டில் உள்ள சுமங்கலிகள் மற்றும் கன்னிப் பெண்கள் தங்கள் பெயரில் இலையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். பூஜைக்கு உரிய சரடை (தோரம்) அம்பாளுக்குப் படைத்து, பின் அதனைப் பெண்கள் தரிக்க வேண்டும்.

4 / 5
கார் அரிசி மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் அடையில், 'உருகாத வெண்ணெய்' வைப்பது மிக முக்கியம். அம்பாளுக்குப் படைத்த அடையில் ஒன்றை சுமங்கலிகள் உண்ண வேண்டும், மற்றொன்றைக் கணவருக்கு வழங்க வேண்டும். கன்னிப் பெண்கள் இரண்டு அடைகளையும் தாங்களே உண்டு வழிபடலாம்.

5 / 5
Follow Us